மலையாள சினிமாவில் எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மட்டுமே உருவாகின்றன. அந்த வகையில் மலையாளத்தில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான படம் டிரைவிங் லைசன்ஸ். இதில் நடிகர் பிருத்விராஜ் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்த படம், ஐயப்பனும் கோஷியும் என்ற பட இயக்குனர் மறைந்த சாச்சி எழுதிய கதை ஆகும். இந்த படத்தை இயக்குனர் லால் ஜூனியர், அதாவது நடிகர் லாலின் மகன் டைரக்ட் செய்திருந்தார். ஒரு பிரபல ஹீரோவுக்கும் அவரது அபிமான ரசிகனாக இருந்து பின்னர் ஈகோ காரணமாக அவருக்கு எதிராகவே திரும்பி தொல்லை கொடுக்கும் ஒரு ரசிகனுக்கும் நடக்கும் ஈகோ போராட்டமாகும்.
ஹீரோ – ரசிகர் ஈகோ யுத்தத்தை மையப்படுத்தி வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் டிரைவிங் லைசென்ஸ் படத்தில் சினிமா ஹீரோ கேரக்டரில் பிருத்விராஜ் நடித்திருந்தார். ஆனால் முதலில் பிருத்விராஜூக்கு பதிலாக முதலில் மம்முட்டியை தான் நடிக்க அணுகியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார் என்கிற ஒரு புதிய தகவலை தற்போது இயக்குனர் லால் ஜூனியர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் லால் ஜூனியர் கூறியதாவது, நடிகர் மம்முட்டியிடம் இந்த கதாபாத்திரத்தை சொன்னபோது அவர் ஏன் நடிக்க மறுத்துவிட்டார். ஏன் என்றால் ஒரு திரைப்படத்திற்குள் மற்றொரு சூப்பர் ஸ்டார் கதாபாத்திரம் வரும்போது அதில் நான் நடிக்கும்போது மக்கள் அந்த பாத்திரத்தை மட்டும் பார்க்காமல், அந்த இடத்திலும் என்னை மம்முட்டியாகவே பார்ப்பார்கள் என்று அவர் கருதினார்.
அதனால் தனது கதாபாத்திரம் தனித்து தெரியாது என்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அப்போது மம்முட்டியின் மறுப்பு குறித்து எனக்கு வருத்தம் ஏற்பட்டாலும் மம்முட்டி போன்ற ஒரு மூத்த கலைஞர் தகுந்த காரணம் இல்லாமல் ஒரு கதையை நிராகரிக்க மாட்டார் என்பது இப்போது புரிகிறது.
அந்த முடிவின் பின்னால் உள்ள அவரது முதிர்ச்சியையும் அனுபவத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று இயக்குனர் லால் ஜூனியர் இப்போது கூறியிருக்கிறார். நடிகர் மம்முட்டி நடிக்க மறுத்த அந்த சூப்பர் ஸ்டார் கேரக்டரில் நடிகர் பிருத்விராஜ் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.





