- Advertisement -
Homeபொழுதுபோக்குசபரிமலை பயணமா? தீபாவளி கொண்டாட்டமா? - தடுமாறிய நடிகர் ஜெயராம் - ட்ரோல் செய்து கலாய்த்து...

சபரிமலை பயணமா? தீபாவளி கொண்டாட்டமா? – தடுமாறிய நடிகர் ஜெயராம் – ட்ரோல் செய்து கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!

- Advertisement -

மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவிலும் அவர் பல படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் கமலுடன் தெனாலி பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடிகர் ஜெயராம் நடித்திருந்தார்.

மேலும் கோகுலம் பிரியங்கா பிரிவோம் சந்திப்போம் பரிமளா அண்ட் கோ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடிகர் ஜெயராம் நடித்திருக்கிறார். சமீப காலமாக நடிகர் ஜெயராம் மலையாள படங்களை காட்டிலும் தமிழ் படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கு மொழி படங்களிலும் ஜெயராம் பிஸியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடிகை ஊர்வசி கதாநாயகியாகவும் நடித்த பரிமளா அண்ட் கோ படம் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான டிவெண்டி 20 என்ற படத்தில் நடிகர் ஜெயராம் நடித்திருந்தார். அப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் நான் எங்கே இருந்தேன் என்கிற தகவலை அவர் இரண்டு மூன்று நேர்காணல்களில் மாற்றி மாற்றி கூறியிருக்கிறார்.

அதாவது டிவென்டி 20 படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு நேர்காணலில் தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்றதாக ஜெயராம் கூறியிருந்தார். அதேபோல் மற்றொரு நேர்காணலில் டிவென்டி 20 படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்த போது சபரிமலைக்கு சென்றதாகவும் ஜெயராம் மாற்றி கூறியிருந்தார்.

- Advertisement -

ஒரே நேரத்தில் சபரிமலைக்கு சென்றதாகவும் தீபாவளி கொண்டாட சென்றதாகவும் நடிகர் ஜெயராம் மாறி மாறி அந்த நேர்காணல்களில் கூறியிருந்தார். அது குறித்த வீடியோ கிளிப்களை சோசியல் மீடியாவில் சிலர் பகிர்ந்து அவரை ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் ஜெயராம் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஜெயராம் கூறியதாவது, 15 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு என்பதால் அந்த சமயத்தில் உண்மையில் நான் எங்கு சென்றேன் என்பது இப்போது தெளிவாக நினைவில் இல்லை. வயதாகும்போது ஏற்படும் ஞாபக மறதி காரணமாகவே இவ்வாறு தவறுதலாக நான் கூறியிருக்கலாம். இதற்காக மக்களை குறை சொல்ல முடியாது என்று நடிகர் ஜெயராம் கூறியிருக்கிறார். மேலும் நான் சொன்னதில் தவறு இருந்ததையும் ஏற்றுக் கொள்வதாக ஜெயராம் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

- Advertisement -

சற்று முன்