- Advertisement -
Homeபொழுதுபோக்குவயநாடு நிலச்சரிவு சம்பவம், அமைதி காக்கும் தளபதி விஜய், நிவாரணமாக ரூ. 35 கோடி அள்ளிக்கொடுத்தாரா...

வயநாடு நிலச்சரிவு சம்பவம், அமைதி காக்கும் தளபதி விஜய், நிவாரணமாக ரூ. 35 கோடி அள்ளிக்கொடுத்தாரா அஜீத்குமார்? – இதுக்கெல்லாம் பின்னணி என்ன தெரியுமா?

- Advertisement -

கேரளம் மாநிலம் வயநாடு முண்டகை பகுதியில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள், மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகள், உறவுகளை இழந்து தவிக்கின்றனர். கேரளம் மாநில அரசும், மத்திய அரசும் நிவாரண உதவிகளை வழங்கி, தேவையான நடவடிக்கைகளை எடுத்தது.

இதுதவிர பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றன. இதுதவிர தமிழக அரசு உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் கேரள அரசுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமா உலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் லட்சங்கள், கோடிகளில் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமா துறை சார்ந்த நடிகர்கள் கமல்ஹாசன் ரூ. 25 லட்சம், விக்ரம் ரூ. 20 லட்சம், சூர்யா, ஜோதிகா ரூ. 50 லட்சம் என சிலர் தங்களது விருப்பம் போல், நிவாரண தொகைகளை கேரள அரசுக்கு வழங்கி வருகின்றனர். அதே போல் பிரபாஸ் ரூ. 2 கோடி, சிரஞ்சீவி, ராம்சரண் தரப்பில் ரூ. 1 கோடி என நிவாரணம் தந்துள்ளனர்.

ஆனால் இதுவரை வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் நடிகர் விஜய் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. இதுவரை அவரது தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை. கடந்த முறை கேரளாவில் கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது, விஜய் பல கோடிகளை நிவாரணமாக வழங்கினார். ஆனால் இதுவரை விஜய் அமைதி காத்து வருகிறார்.

அதே போல் இரு தினங்களுக்கு முன், நடிகர் அஜீத்குமார் ரூ. 35 கோடியை கேரள அரசுக்கு நிலச்சரிவு சம்பவத்துக்கு நிவாரணமாக அளித்ததாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் விசாரித்த வகையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அஜீத்குமாரை பொருத்த வரை, எந்த தகவலாக அறிவிப்பாக இருந்தாலும் அவரது நண்பர் மற்றும் மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

அதனால் இப்படி ஒரு பொய்யான தகவலை, அவரது ரசிகர்கள் தரப்பில் யாரேனும் அவர் மீதுள்ள அபிமானம் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அஜீத்குமாரை பொருத்தவரை இப்படி பெரிய அளவில் நிவாரண தொகை வழங்கும் அளவுக்கு அவர் நடந்துக்கொண்டது இல்லை. இதுபோன்ற மக்கள் பாதிப்புகளுக்கு அரசுதான் உதவும். நடிகராக நாம் உதவ வேண்டிய அவசியம் இல்லை என்பது அஜீத்குமாரின் எண்ணமாக உள்ளது, என்று வலைப்பேச்சு அந்தணன் சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.

சற்று முன்