தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகன் இயக்கிய படங்களுக்கு ரசிகர்களிடம் தனி கவனமும் வரவேற்பும் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. குறிப்பாக காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி புதுப்பேட்டை இரண்டாம் உலகம் ஆயிரத்தில் ஒருவன் நானே வருவேன் என அவரது படங்கள் எல்லாமே தனித்துவமான ஒரு கதைக்களத்தில் வெளியான படங்களாகும்.
அதிலும் ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் நடித்த 7ஜி ரெயின்போ காலனி செல்வராகவன் இயக்கிய படங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ஒரு மாஸ் ஹிட் படமாக இருந்தது. அந்த படத்தில் காதலை ஒரு உன்னதமான மொழியில் அவர் தந்திருப்பார். இப்போது 7ஜி ரெயின்போ காலனி 2வது பாகமாக விரைவில் திரைக்கு வர உள்ளது.
இயக்குனர் செல்வராகவனின் சகோதரி மகன் பவிஷ். இவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகி நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் லவ் ஓ லவ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவனும் தனது மருமகன் பவிஷ் உடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் கூறியதாவது, லவ் ஓ லவ் படம் வெற்றி பெற்றால் எனக்கு கார் பரிசு அளிக்க வேண்டும். தனுஷ் கடும் உழைப்பாளி. சும்மா யாருமே அப்படி வந்துட முடியாது. அவர் பயங்கர ஹார்டு வொர்க்கர். 40 அடி மாடியிலிருந்து உருண்டு வருவார். படத்துக்காக கேரக்டருக்காக எது வேணும்னாலும் பண்ணுவார். அந்த குவாலிட்டியை பவிஷ் கிட்டேயும் பார்த்தேன். 5 பக்க டயலாக்கை கூட ஈசியாக பவிஷ் பேசுகிறார்.
நான் 20 வருஷத்துக்கு முன்னாடியே காதலைப் பற்றி படம் எடுத்தேன். இப்போது இருக்கும் ஜென்ஸி காதல் வேறு மாதிரி உள்ளது. ஜீவி பிரகாஷை வைத்து நான் எடுத்த மென்டல் மனதில் படம் 80 சதவீதம் முடிந்துவிட்டது. அதில் இந்த காலத்து காதலைப் பற்றி என் பார்வையில் சொல்லி இருக்கிறேன்.
உண்மையை சொல்லனும் என்றால் எனக்கு இந்த ஜெனரேஷன் காதல் மேல பெருசா நம்பிக்கை இல்லை. லவ் எப்படி இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கணும்ன்னா முதல்ல நான் யாரையாவது புதுசா லவ் பண்ணி பாத்துட்டு தான் சொல்லணும். காதலோடு பேர் தான் மாறுமே தவிர காதல் என்றுமே அழியாதது என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் வெளிப்படையாக பேசினார்.





