- Advertisement -
Homeபொழுதுபோக்குநிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லாத ஒரு கதை, வாட் ப்ரோ? இட் ஈஸ் வெரி ராங்க்...

நிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லாத ஒரு கதை, வாட் ப்ரோ? இட் ஈஸ் வெரி ராங்க் ப்ரோ? – ஜனநாயகன் படம் குறித்து விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

முன்னாள் நடிகர் இன்றைய முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, பாலய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தப் படத்தை அப்படியே எடுத்து வைக்கவில்லை. தமிழுக்கு ஏற்றபடி மாற்றி இருக்கிறார்கள். இந்த படம் இந்த படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் திரையில் ஓடுகிறது.

இதில் இரண்டரை மணி நேரம் பல்லை கடித்துக் கொண்டு பார்த்தால் கூட கடைசி அரை மணி நேரம் எல்லாம் ரோபோட் ஆர்சி போர் என சேர்த்து கொலையாய் கொன்று விட்டார்கள். 10 நிமிடங்களுக்கு ஒரு மிஷனை எடுத்துக் கொள்கிறார் ஹீரோ. உடனே உடனே ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவுகிறார். டாம் குரூஸ் அவருடைய உயிரை பணயம் வைத்து அந்த மிஷன்களை செய்து கொடுப்பார். இவரோ நம் உயிரை பணயம் வைத்து மிஷன்களை செய்கிறார்.

- Advertisement -

அப்படி எத்தனை மிஷனை அவர் செய்வார்? ஜெயிலில் பிரச்சனை ஜெயிலர் வீட்டு பிரச்சனை கள்ளச்சாராயம் பிரச்சனை தூத்துக்குடி மதக் கலவரம் இடையிடையே கட்சி பிரச்சாரம் வேறு. அதற்குப் பிறகு ரிமோட் கண்ட்ரோல் போர் ரோபோட்டோடு சண்டைன்னு போகுது. அதேபோல் தமிழ் சினிமா வழக்கப்படி படம் என்று ஒன்று இருந்தால் ஹீரோயின் இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப ஒரு வேஸ்ட் லக்கேஜ் ஹீரோயினை வைத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் பத்தாது என்று ஒன் லாஸ்ட் டான்ஸ் வேறு. அதையெல்லாம் பார்த்துட்டு வந்து சேர்ந்தோம். தெலுங்கு படத்தை தமிழில் எடுத்து இருந்தால் பரவாயில்லை. தெலுங்கு படத்தை தெலுங்கு படமாக அதிகமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். இதை தெலுங்கில் வேறு டப் செய்து இருக்கிறார்கள். அதற்கு வேறு ஏண்டா எங்கள் வீட்டு கேசரியை எடுத்துக் கொண்டு சென்று அதில் கொஞ்சம் முந்திரிப்பருப்பு போட்டு எங்க தலையிலேயே கட்டந் பார்க்கிறீர்களா? என மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். நிஜத்தில் வாய்ப்பே இல்லை என்ற கதையை படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவை கலவர பூமியாக்குவதுதான் வில்லனின் நோக்கம். ஆனால் அந்த வில்லன் தன்னுடைய ஆட்களை அனுப்புகிறான். அவர்களிடம் துப்பாக்கியே இல்லை. ஹீரோவும் வெறுங்கையோடு தான் சொல்கிறார். எம்ஜிஆர் 3வது குத்து வாங்கிய பிறகுதான் அடிக்க ஆரம்பிப்பார். அந்த மாதிரி தன்னை மூன்று முறை ஒருவர் கூப்பிடட்டும் என இந்த ஹீரோவும் இருக்கிறார்.

வாட் ப்ரோ? இட் ஈஸ் வெரி ராங்க் ப்ரோ? இந்த கேள்வியை அவருடைய பிகில் படத்துக்கு கேட்டிருக்கிறோம். வழக்கமாக கேட்பதுதான். இருந்தாலும் ஒன் லாஸ்ட் டைம் ப்ரோ இப்போ கேட்கிறேன். ஹீரோ சோத்துக்கு என்ன செய்கிறார்? வேலை போய்விட்டது. அவருடைய அம்மாவும் சோறு இல்லாமல் இருக்கிறது. ஹீரோடு சுற்றுபவர்கள் எல்லாம் யானை லெக் பீஸ் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சோற்றுக்கு என்ன செய்கிறார்கள். படத்தில் பாடல்களும் சரியாக இல்லை. இந்த படம் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது. கட்சியின் பிரச்சார படம். அந்த எண்ணம் நூறு விழுக்காடு வென்றது என்று ப்ளு சட்டை மாறன் விமர்னம் செய்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்