- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்பவும் நான் அப்பாவை பார்க்க போனா முதல் கேள்வி அதுவாக தான் இருக்கும் - தனது...

இப்பவும் நான் அப்பாவை பார்க்க போனா முதல் கேள்வி அதுவாக தான் இருக்கும் – தனது பெற்றோர் ராமராஜன் நளினி குறித்து பேசிய மகள் அருணா ராமராஜன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் நட்சத்திர ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். அதே போல் நடிகை நளினியும் முன்னணி நாயகியாக இருந்தவர். இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டனர். இந்த நட்சத்திர தம்பதியின் மகள் வழக்கறிஞர் அருணா ராமராஜன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது, அம்மா அப்பா ரெண்டு பேருமே அதிகம் படிக்கலே. அதனால பிள்ளைங்களோட படிப்பு ரொம்ப முக்கியம்ன்னு அம்மா நினைச்சாங்க. அந்த விஷயத்துல அப்பா நேரெதிரானவர். படிப்பு ரெண்டாம் பட்சம்தான். மரியாதை பழக்க வழக்கங்கள்தான் முக்கியம்ன்னு சொல்வார். அப்பாகிட்ட கிராமத்தார்களுக்கே உரிய அந்த மரியாதையைப் பார்க்கலாம்.

- Advertisement -

வீட்டுக்கு யார் வந்தாலும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி குடிக்க தண்ணீர் கொடுத்து உபசரிக்கணும்ன்னு சொல்வார். நீ எவ்வளவு பெரிய செலிபிரிட்டி குழந்தையா இருந்தாலும் அடுத்தவங்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை முக்கியம்ன்னு என்கிட்ட சொல்வார். வீட்டுக்குள்ளே பிரளயமே நடந்திட்டிருந்தாலும் அந்த நேரம் யாராவது வீட்டுக்கு வந்தா எல்லாத்தையும் நிறுத்திட்டு அவங்களை உபசரிக்கணும் என்பார்.

அம்மாவும் அப்பாவும் பிரியும்போது நானும் தம்பியும் 7வது படிச்சிட்டிருந்தோம். எங்க முன்னாடி அவங்க சண்டையே போட்டதில்லை. பிரிவுங்கிறது அவங்க ரெண்டு பேரும் பேசி எடுத்த முடிவு. அதை எங்களுக்குப் புரிய வெச்சாங்க. அம்மாவைப் பத்தி அப்பாவோ, அப்பாவைப் பத்தி அம்மாவோ எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட தப்பா பேசினதில்லை. டைவர்ஸ் அன்னிக்கு கோர்ட்டுல அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. அப்பா தான் அம்மாவைத் தூக்கினார்.

- Advertisement -

நீங்க நிஜமாவே டைவர்ஸூக்குத்தான் வந்திருக்கீங்களான்னு ஜட்ஜே ஆச்சர்யமா கேட்டார். அந்தச் சூழல்லயும் அவங்களுடைய அன்பு குறையலே. இன்னிக்கும் அப்படித்தான். அவங்க டைவர்ஸூக்குப் பிறகு தம்பியும் நானும் அம்மா கூடதான் இருந்தோம். எங்களுக்குத் தோணும் போதெல்லாம் அப்பாவைப் பார்க்கிற சுதந்திரம் இருந்தது. ஆனாலும், அப்பாவை தினம் தினம் மிஸ் பண்ணியிருக்கோம்.

என்னை அம்மா ஒரு மினி ராமராஜனாதான் வளர்த்திருக்காங்க. அப்பாவின் குணங்கள் என்கிட்ட நிறைய இருக்கு. அம்மாவுக்கு அப்பா மேல வெறித்தனமான அன்பு உண்டு. அப்பாவும் அப்படி தான். அவரைப் பார்க்கப் போனா முதல்ல ‘அம்மா எப்படி இருக்காங்கன்னுதான் கேட்பார். இதையெல்லாம் நான் சொன்னா பலரும் நம்ப மாட்டாங்க, நடிக்கிறோம்ன்னு சொல்வாங்க. ஆனா அதுதான் நிஜம் என்று அருணா ராமராஜன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்