மனித வாழ்க்கையில் காதல் என்பது ஒரு தவிர்க்க முடியாத உன்னத உணர்வாக இருக்கிறது. இது சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி சாதனை மனிதர்களுக்கும் அந்தந்த பருவ வயதில் ஏற்படக்கூடிய ஒரு ஈர்ப்பான ஒரு சந்தோஷமான விஷயம் தான். வாழ்க்கையில் எப்போதுமே ஏதேனும் ஒரு சூழலில் ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீதோ ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீதோ காதல் உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நடிகை சுவாசிகாவுக்கும் முதல் காதல் ஏற்பட்டு அது தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷூக்கு ஜோடியாக நடித்த நடிகை சுவாசிகா, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தையும் வரவேற்பையும் பெற்றார்.
இதற்கு முன்பு தமிழில் கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் லப்பர் பந்து படம் தான் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து மாமன் படத்தில் நடிகர் சூரிக்கு அக்காவாக சுவாசிகா நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை கொண்டாடிய கருப்பு படத்திலும் வக்கீல் கேரக்டரில் சுவாசிகா நடித்திருந்தார்.
இப்போது அவர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்த நூறு சாமி படமும் நல்ல ஒரு பாராட்டை அவருக்கு பெற்று தந்திருக்கிறது. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க சுவாசிகவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிய சுவாசிகாவுக்கு லவ்வர் பந்து படமும் சமீபத்தில் வெளியான நூறு சாமி படமும் மிகப்பெரிய ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.
கடந்த ஆண்டு சின்னத்திரை நடிகர் தனது காதலர் பிரேம் ஜேக்கப் என்பவரை சுவாசிகா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுவாசிகா, தனக்கு முதல் காதல் இருந்தது என்றும் அது கைகூடாமல் போனது ஏன் என்பது குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார். அந்த நேர்காணலில் நடிகை சுவாசிகா கூறியதாவது, எனக்கு இதற்கு முன்பு ஒரு காதல் இருந்தது. அது ஒன்றும் தவறான தேர்வு இல்லை.
அந்த நபர் மிகுந்த தோற்றப்பொலிவு உடையவராகவும் என்னை நன்கு மதிப்பவராகவும் இருந்தார். ஆனால் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடிகள் அவரை மனதளவில் பாதித்தன. குடும்ப பிரச்சனைகளையும் காதலையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அந்த உறவு முடிவுக்கு வந்தது. அவரது பிரச்சனை என்னவென்று எனக்கும் தெரிந்தது. அதனால் இருவரும் விலகும் சூழல் ஏற்பட்டது என்று நடிகை சுவாசிகா கூறியிருக்கிறார்.





