- Advertisement -
Homeபொழுதுபோக்குசிறுமியின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த விவகாரம், ஜெயிலர் பட வில்லன் மலையாள நடிகர் விநாயகன் மீது...

சிறுமியின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த விவகாரம், ஜெயிலர் பட வில்லன் மலையாள நடிகர் விநாயகன் மீது போலீசார் வழக்குப்பதிவு!

- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விநாயகன். சமீபத்தில் நடிகர் மம்முட்டியுடன் அவர் நடித்த களம் காவல் படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக விநாயகன் மிக சிறப்பாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பெண்களை கொல்லும் சைக்கோ கேரக்டரில் நடிகர் மம்முட்டி மிரட்டியிருந்தார்.

நடிகர் விநாயகன் தமிழில் திமிரு மரியான் சிலம்பாட்டம் ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் மலையாளம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்திலும் விநாயகன் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது.

- Advertisement -

மதுப்பழக்கம் உள்ள நடிகர் விநாயகன் அடிக்கடி போதையில் ஏதேனும் பிரச்சனைகள் செய்து போலீஸ் வழக்குகளில் சிக்குவது வழக்கமாக நடந்து வருகிறது. மது போதையில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தகராறு மற்றும் சில சம்பவங்கள் அவரை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்று நிறுத்தியது.

ஆனால் இந்த முறை சிறுமி புகைப்படத்தால் பிரச்சனை வந்துள்ளதால் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விநாயகன் மீது கேரள மாநிலம் தாழக்கரையைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், எட்டு வயதுக்கு உட்பட்ட தனது மகள் புகைப்படத்தை விநாயகன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சிறுமியின் தந்தை புகார் அளித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கேரளம் மாநில குழந்தைகள் பாதுகாப்பு இயக்குனரகத்தின் வழிகாட்டுதலின் பேரில் நடிகர் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவேலிக்கரா போலீசார் நடிகர் விநாயகன் மீது பெண்களை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த சம்பவத்துக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள தாழக்கரா பகுதியை சேர்ந்தவர் மும்பையில் வேலை செய்து வருகிறார். 2025ம் ஆண்டில் விநாயகன் அமைச்சர் ஒருவரை விமர்சித்து முகநூலில் கவிதை ஒன்றை பதிவிடுகிறார். அது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இந்த பதிவை எடுத்து விநாயகனுக்கு வாட்ஸ் அப் வழியாக புகார் அளித்தவர் உரையாடி இருக்கிறார். இந்த வாக்குவாதத்தை விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிடுகிறார். அந்த புகாரில் வாட்ஸ் அப் டிபி யில் அவரது 8 வயது மகளும் இருக்கிறார். அதில் மொபைல் எண்ணுடன் விநாயகன் பதிவிட்டதால் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்