சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி 2 மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற நிலையில் அந்த படத்தின் வெற்றி விழா, சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு பேசியதாவது, கட்டா குஸ்தி படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என்று முடிவெடுத்த நொடியில் இருந்து அவரது அசாத்தியமான உழைப்பை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.
இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று 24 மணி நேரமும் சினிமாவைப் பற்றியே சிந்திப்பவர். அவருக்கு இந்த வெற்றி ஒரு தகுதியான பரிசுதான். நான் கேட்காமலேயே எனக்கு சிலுக்குவார்பட்டி சிங்கம் பட வாய்ப்பு விஷ்ணு கொடுத்தார். அடுத்த கதை எழுதுங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தினார். அப்படி உருவானது தான் கட்டாகுஸ்தி 1 படம்.
விஷ்ணு சார் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கே நிறைய கணக்கு போட்டு அனலைஸ் செய்வார். அதனால் தான் அவரை அனலைசிங் ஸ்டார் கால்குலேட்டிங் ஸ்டார் எக்ஸ்பிரிமெண்டல் ஸ்டார் என்று நான் அழைப்பேன். அப்படிப்பட்டவர் 17 வருட சினிமாவில் 22 படங்கள் மட்டுமே செய்துள்ளார். ஆனால் ஒரு தயாரிப்பாளராகவும் ஹீரோவாகவும் என்னை முழுமையாக நம்பி அடுத்தடுத்து மூன்று பட வாய்ப்புகளை கொடுத்துள்ளார்.
நான் அவருக்கு மூன்று படங்கள் செய்ததற்காக எனக்கே மூன்று அவார்டுகள் கொடுக்கலாம். ஒரே நேரத்தில் பள்ளி கல்லூரி மருத்துவமனை என பல நிறுவனங்களையும் கூடவே 10 படங்களையும் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எப்போதும் பரபரப்பாகவும் புன்னகையுடன் இருப்பது எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்.
நடிகை ஐஸ்வர்யாவுக்கு ஆரம்பத்தில் கதை மீது பெரிய நம்பிக்கை இல்லை என்றாலும் என்னை நம்பி வந்து சிறப்பாக நடிப்பை தந்துள்ளார். குழந்தை நட்சத்திரம் சாரா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாலே தனி வெளிச்சம் வந்துவிடும். மணிவண்ணன் சாருக்கு பிறகு காமெடி வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்யக்கூடிய கருணாஸ். இந்த படத்துக்கு பெரிய பலமாக இருந்துள்ளார்.
முனீஸ்காந்த காளியண்ணன் போன்றவர்கள் பெரிய ரோல் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்காக வந்து நடித்துக் கொடுத்தார்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஷான், இந்த படம் நூறு கோடி அடிக்கும். ஏன் கவலைப்படறீங்க? என்று ஆரம்பத்திலேயே எங்களுக்கு பெரிய நம்பிக்கையாக இருந்தார். எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று கட்டாகுஸ்தி 2 படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு பேசியிருக்கிறார்





