- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்தான் எனக்கு ஜோடியா நடிக்கணும், இந்த கதாநாயகி வேண்டாம், அடம் பிடித்த நடிகர் தனுஷ் -...

அவர்தான் எனக்கு ஜோடியா நடிக்கணும், இந்த கதாநாயகி வேண்டாம், அடம் பிடித்த நடிகர் தனுஷ் – அப்செட் ஆன டைரக்டர்!

- Advertisement -

ஒரு காலகட்டத்தில் இயக்குனர்கள் சொல்வதை கேட்டு நடக்கும் ஒரு சூழலில் படத்தின் கதாநாயகன்கள் இருந்தனர். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு நடப்பது தான் ஹீரோவின் வேலையாக இருக்கும். அப்படித்தான் ஸ்ரீதர் கே பாலச்சந்தர் பாரதிராஜா மகேந்திரன் பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்களின் படங்களில் ஹீரோக்கள் நடித்தார்கள்.

இப்போதும் இயக்குனர் மணிரத்னம் பாலா வெற்றிமாறன் அமீர் போன்றவர்களின் படங்களில் இன்று வரை அது தொடர்ந்து வருகிறது. ஆனால் பெரிய நடிகர்கள் இதிலிருந்து மாறுபட்டு காணப்படுகின்றனர். சில குறிப்பிட்ட நட்சத்திர நடிகர்கள் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கேட்டு நடக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் நெருக்கடியான சூழல் ஏற்படுகிறது.

- Advertisement -

சில நேரங்களில் ஹீரோக்களின் தலையீட்டால் இயக்குனர்கள் தாங்கள் விரும்பியபடி கதை திரைக்கதையை அமைக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அந்த படம் எதிர்பார்த்த படமாக இல்லாமல் வேறு மாதிரியான கோணத்தில் சென்று முடிவில் படுதோல்வி படமாக அமைகிறது. இது போன்ற அனுபவங்கள் பல நேரங்களில் இன்றைய இயக்குனர்களுக்கு நடந்திருக்கிறது.

சில ஹீரோக்களும் பாதி இயக்குனர்களாக மாறி படப்பிடிப்பு தளத்தில் இடையூறாக செயல்படுவதால் பல படங்கள் இயக்குனர்களின் விருப்பப்படி உருவாவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இதை திரைத்துறை சார்ந்த திருப்பூர் சுப்ரமணியம் போன்றவர்களே கூறி விட்டார்கள். அந்த அளவுக்கு இயக்குனர்களின் பணியில் ஹீரோக்கள் குறுக்கீடு செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சில ஹீரோக்களை பொறுத்தவரை கதாநாயகி யார் என்பதை இயக்குனரை காட்டிலும் அவர்களே முடிவு செய்கிறார்கள். இயக்குனர்கள் விரும்பிய நடிகையை கதாநாயகி ஆக்க முடியாமல் ஹீரோ விரும்பும் நடிகையை நாயகியாக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து கதாநாயகியாக நடித்தவர் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.

அடுத்ததாக தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ள 2வது படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கமிட் செய்திருக்கிறார். ஆனால் இதை நடிகர் தனுஷை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடிகை மமீதா பைஜூ தான் நடிக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். ஹீரோவே கூறிவிட்டதால் வேறுவழியின்றி சஞ்சனாவுக்கு பதிலாக மமீதா பைஜூ இந்த படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தனுஷ் மமிதா பைஜூ இணைந்து நடித்த சமீபத்தில் வெளியான கர படம் படுதோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்