- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவங்களுக்கு சப்போர்ட் பண்ண மிஷ்கின் பா ரஞ்சித் வெற்றிமாறன் இருக்காங்க, ஆனா இவங்களுக்கு யார் இருக்காங்க?...

அவங்களுக்கு சப்போர்ட் பண்ண மிஷ்கின் பா ரஞ்சித் வெற்றிமாறன் இருக்காங்க, ஆனா இவங்களுக்கு யார் இருக்காங்க? – விளாசித் தள்ளிய நடிகர் கூல் சுரேஷ்!

- Advertisement -

இன்றைய சமூகம் விளம்பரத்தின் வலைக்குள் சிக்கியிருக்கிறது. காலையில் எழுந்தவுடன் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் முதல் இரவில் படுக்கப் போகும் போது கொளுத்தி வைக்கப்படும் கொசுவர்த்தி வரை எல்லாமே விளம்பரப்படுத்தப்படுகின்றன. எல்லா பொருட்களுக்குமே விளம்பரம் தேவையாகி விட்டது.

சாணி வரட்டியை விற்பதாக இருந்தாலும் கூட அதையும் கூவி கூவி விளம்பரம் செய்ய வேண்டிய சூழலில் சமூகம் மாறியிருக்கிறது. அதே நேரத்தில் சாணி வரட்டியை கூட தங்கம் போல ஜொலிப்பதாக விளம்பரம் செய்யும் இழிவான வியாபார யுக்தியும் பெருகி விட்டது. நுகர்வோர் கலாசாரம் பெருக பெருக இங்கே எல்லாமே விளம்பரமாக மாறிவிட்டது என்பதுதான் அவலம்.

- Advertisement -

அதில் சினிமாவும் விதிவிலக்கு அல்ல. ஒரு படம் குறித்த தகவலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை செய்திகள் வாயிலாக தான் ரசிகர்கள் தெரிந்துக்கொள்ள முடியும். சினிமா சார்ந்த வார இதழ்கள் மாத இதழ்களில்தான் அந்த படங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் புகைப்படங்கள் வெளியாகும். இதற்கென பல சினிமா இதழ்கள் விற்பனையிலும் இருந்தன.

ஆனால் இப்போதெல்லாம் டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் பெருகி விட்ட சூழலில் பிரமோசன் என்ற பெயரில் ஒரு படம் குறித்த தகவல் தொடர்ந்து தினமும் வெளியாகின்றன. டை்டடில் போஸ்டர் டீசர் டிரெய்லர் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் பர்ஸ்ட் சிங்கிள் பர்ஸ்ட் சிங்கிள் என தொடர்ந்து அப்டேட்டுகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஒரு படத்துக்கு விளம்பரம் செய்ய பல இயக்குனர்கள் பல நடிகர்கள் களத்தில் இறங்கி அந்த படம் குறித்து பாராட்டி தள்ளுகின்றனர். ஆனால் உண்மையில் அது சிறந்த படம்தானா என்பதை ரசிகர்கள் தான் உண்மையாக சொல்ல முடியும். அதே நேரத்தில் திரைத்துறை சார்ந்தவர்கள் அந்த படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்து மொக்கை படத்தையும் சூப்பர் என்கின்றனர். ஆனால் சின்ன பட்ஜெட் படங்களை அந்த நடிகர்கள் இயக்குனர்கள் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து இன்று ஒரு படவிழாவில் பேசிய காமெடி நடிகர் கூல் சுரேஷ் கூறியதாவது, இங்கே பேசும்போது சின்ன படத்துக்கு சப்போர்ட் செய்ய வந்த கூல் சுரேஷூக்கு நன்றின்னு சொன்னாங்க. நான் மனசு நொந்து போய் சொல்றேன். இந்த மாதிரி சின்ன படத்துக்கு கூல் சுரேஷ்தாங்க சப்போர்ட் பண்ணுவேன். ஏன் தெரியுமா? பெரிய படங்களுக்கு சப்போர்ட் பண்ண இயக்குனர் மிஷ்கின் இருக்கிறார். பெரிய படங்களுக்கு சப்போர்ட் பண்ண பா ரஞ்சித் இருக்கிறார். பெரிய படங்களுக்கு சப்போர்ட் பண்ண வெற்றிமாறன் இருக்கிறார். இந்த மாதிரி சின்ன பட்ஜெட் படங்களுக்கு கூல் சுரேஷ் மாதிரி ஆளுதான் சப்போர்ட் பண்ண முடியும் என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்