- Advertisement -
Homeபொழுதுபோக்குஒவ்வொரு பிறந்த நாளிலும் என் குருநாதர் எனக்கு தந்த அந்த பரிசு, மீண்டும் அது எனக்கு...

ஒவ்வொரு பிறந்த நாளிலும் என் குருநாதர் எனக்கு தந்த அந்த பரிசு, மீண்டும் அது எனக்கு அப்போது கிடைக்கும் – உருக்கமாக பேசி நெகிழ வைத்த நடிகர் பாண்டியராஜன்!

- Advertisement -

இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பாண்டியராஜன். பிறகு இயக்குனராகி நடிகராகவும் மாறினார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் கூறியதாவது, என்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய காலகட்டத்தில் எனது குருநாதரை அழைக்கலாம் என்று நினைப்பேன். பிறந்த நாளுக்கு எல்லாம் குருநாதரை அழைத்தால் அது ரொம்பவும் ஓவராகி விடுமோ என்று நினைத்து தவிர்க்க நினைப்பேன். ஆனால் ஒருமுறை என் பிறந்த நாள் என கேள்விப்பட்டு அவரே நேரடியாக வந்து விட்டார்.

சார் வந்துவிட்டார் என்றவுடன் எனக்கு பெரிய அதிர்ச்சியாகி விட்டது. அவர் வந்த பின்பு கேக் வெட்டி எல்லாருக்கும் கொடுத்தோம். எல்லோரும் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்போது அவர் எனக்கு ஒரு கவர் கொடுத்தார். கவருக்குள் ஒரு புது சட்டை இருந்தது. யோவ் உன் அளவுக்கு சரியா இருக்கான்னு பார்த்துக்கய்யா என்றார். என் பிறந்த நாளுக்கு சர்ட் பிரசன்ட் பண்ணிட்டு போனார்.

- Advertisement -

அதே மாதிரி அடுத்த பிறந்த நாளுக்கும் அதே மாதிரி அவர் வர்றார். புது சட்டை ஒன்றை பரிசாக கொடுத்துட்டு போறார். இப்படி ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எனக்கு சட்டை பிரசன்ட் பண்ணுவார். என்ன அவர்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கும் போது சட்டை வாங்கி கொடுத்தார். இப்போ நடிகராக டைரக்டராக இருக்கிறோம். இப்பவும் சட்டை வாங்கி கொடுக்கிறாரே என்று எனக்கு உள்ளே ஒரே ஃபீலிங்கா இருக்கும்.

போன பர்த்டே வுக்கு சார் வீட்ல இருந்து புறப்பட்டுட்டாங்கன்னு போன்ல சொன்னாங்க. ஆனா நேரமாகியும் இங்கே வரலை. அப்புறம் விசாரிச்சா பாண்டி பஜார்ல கார்ல அவர் உட்கார்ந்து எனக்கு சட்டை வாங்க ஜவுளிக்கடைக்கு ஆளை அனுப்பிச்சிருக்கார்ன்னு தகவல் தெரிஞ்சுது.

- Advertisement -

இப்படி போய் ஜவுளிக்கடை வாசல்ல காருக்குள்ள உட்கார்ந்துட்டு எனக்காக சட்டை எடுத்துட்டு வர்றாரேன்னு யோசிச்சேன். ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் மேல இவ்வளவு பாசமா இருக்காரேன்னு நினைச்சேன். இப்போ அவர் நம்மகூட இல்லை. அவர் இருக்கிற எடத்துக்கு நான் போகும் போது என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பா போவேன்.

அப்போது என்னை பார்த்துட்டு என்னய்யா உங்களை எல்லாம் விட்டுட்டு வந்துட்டேன் நல்லா இருக்கறியா, சாப்பிட்டியான்னு கேட்டுட்டு என்கிட்ட ஒரு கவரை கொடுப்பார். பாண்டியா இதுல ஒரு சட்டை இருக்கு. அளவு எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோன்னு சொல்வார். அப்பவும் எனக்கு எங்க டைரக்ட் ஒரு சட்டை பிரசன்ட் பண்ணுவார் என்று நம்புகிறேன். அது கண்டிப்பா நடக்கும் என்று இயக்குனர் நடிகர் பாண்டியராஜன் உருக்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்