ஜமா படத்தின் இயக்குனர் பாரி இளவழகன் அவரே இயக்கி ஹீரோவாக நடித்த படம் அன்பே டயானா. இந்த படத்தில் ரோஜா ரம்யா ரங்கநாதன் சேத்தன் பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரோஜா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜமா படத்தை தொடர்ந்து இந்த படத்தில் ஹீரோவாக பாரி இளவழகன் நடித்திருக்கிறார்.
அன்பே டயானா படம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, ஹீரோவின் குடும்பம் தெலுங்கு பேசும் குடும்பம். அந்த ஹீரோ ஆங்கில இந்திய பெண்ணை காதல் செய்கிறார். ஆனால் அவர்களது கலாச்சாரத்தை பார்த்து பயப்படும் ஹீரோ, அந்தப் பெண்ணை கழட்டி விட பார்க்கிறார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
கதையும் ஐடியாவும் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் ஒழுங்காக எழுதவில்லை. இந்த மாதிரியான காதல் கதையில் ஹீரோவும் ஹீரோயினும் எப்படியும் சேர்ந்து விட வேண்டும் என்று படம் பார்ப்பவர்களுக்கு தோன்ற வேண்டும். ஆனால் இதில் பெரிய குழப்பம். ஹீரோவுக்கே ஹீரோயினை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை இல்லாத போது படம் பார்க்கும் நமக்கு என்ன தோன்றும். இரண்டாவது பாதி முழுக்க வேஸ்ட் தானே?
ஹீரோயினை கட்டிக் கொள்ளும்படி சீன்களை செய்திருந்தால் பரவாயில்லை. அப்படியும் சீன்களை காணவில்லை. ரொம்ப மேம்போக்கான கதையை சொல்லி இருக்கிறார்கள். கதை மட்டும் தான் புத்திசாலித்தனமாக இருக்கிறது. கலாச்சாரங்களுக்கு இடையே ஒத்து வருவதில்லை என்று மட்டும் சொல்லியிருந்தால் இந்த படத்துக்கு ஹீரோ மார்க் தான். அந் ஆங்கிலோ இந்தியன் குடும்பம்தான் இப்படத்துக்கு புதிய கலரை கொடுத்திருக்கிறது.
அதற்கு ஏற்றபடி ஹீரோயினை செலக்ட் செய்திருக்கிறார்கள். ஹீரோயின் அப்பா கேரக்டர் நன்றாக நடித்து இருக்கிறார். பெங்களூரு தமிழ் பையனாக பரிதாபங்கள் கோபி நடித்து இருக்கிறார். ஓரளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார். அது கொஞ்சம் ரசிக்கும்படியாக இந்தது. நிறைய இயக்குனர்கள் முதல் படத்தில் முழு உழைப்பை போட்டு சூப்பராக கொடுத்து விடுவார்கள். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை வாங்கிவிடும். ஆனால் வசூல் இருக்காது. அதனால் வந்த அந்த கோபத்திலேயே நல்ல படம் எடுத்தால் பார்க்க மாட்டார்கள்.
கமர்சியல் குப்பை என்றால் பார்ப்பீர்கள்தானே? இருங்கள் ஒரு கமர்சியல் குப்பையை நானும் உங்களுக்கு தலையில் கட்டுகிறேன் என்று சொல்லி கட்டி விடுவார்கள். அதே போல் இந்த இயக்குனரும் போன படம் ஜமா உண்மைக்கு நெருக்கமாக நேர்மையான ஒரு படத்தை கொடுத்திருந்தார். ஆனால் அது வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. அந்த கோபத்தில் தான் அவர் இப்படி ஒரு படத்தை எடுத்து நம் தலையில் கட்ட வந்திருக்கிறார். அவர் கோபம் எல்லாம் நியாயம் தான். அதற்கு நாம் பலியாக முடியுமா? என்று ப்ளு சட்டை மாறன் அதில் கூறியிருக்கிறார்.





