இயக்குனர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் அருள்வான். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அருள்வான் படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் அதில் கூறியிருப்பதாவது, இந்த படத்தின் கதையைப் பற்றி பார்த்தோம் என்றால் ஒரு மலை கிராமம். அங்கே மக்கள் எல்லாம் அமைதியாக வாழ்கிறார்கள். அந்த ஊரில் சட்டவிரோத செயல்கள் செய்யும் ஒருவரும் வனத்துறை அதிகாரி ஒருவரும் சேர்ந்து கொண்டு ஊரிலிருந்து மக்களை காலி செய்ய வேண்டும் என்று வேலை செய்கிறார்கள்.
அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் இதன் கதை என்று சொன்னால், வந்த கதையை எடுக்கலாம். வந்து நொந்த கதையை எடுக்கலாமா என்று சொல்வார்கள் என்பதால் இது கதை கிடையாது. இன்னொரு கதை இருக்கிறது. அதுதான் மெயின் கதை என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். அப்போ இதற்கு முன் சொன்ன கதை என்ன என்று கேட்டால் இரண்டு ஃபுட்டேஜ் இருக்க வேண்டாமா? அதற்காக அது.
சின்னப் பெண் ஒருவர் படித்து பெரிய ஆளாக ஆசைப்படுகிறார். எனவே மாவட்ட கலெக்டரை சந்திக்கிறது அந்த சின்ன பெண். அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. நல்ல கதை இருக்கிறது என்பதற்காக உருவாக்கப்பட்ட படம் இல்லை இது. கால்சீட் கிடைத்துவிட்டது என்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு படம். படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே கதையை எழுதி இருப்பார்கள் போல.
இந்த படத்தில் மலைவாழ் மக்கள் ஒரு மொழி பேசுகிறார்கள். அந்த மொழி பேசுவது ஒரு பக்கம் இருக்கட்டும். படம் பார்ப்பவர்கள் புரிதலுக்காக அவர்கள் தமிழிலேயே பேசுவார்கள் என்று சொல்வார்கள். படத்தில் வரும் கேரக்டர்கள் எல்லாம் தமிழில் பேசும். ஆனால் அந்த பெண்ணோ ஸ்கூலில் சென்று அவர்கள் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறது. அந்த மொழியை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது என சொல்கிறது.
இதுவே படத்தை குழப்பி விட்டது. படத்துக்குள் காந்தாரா கதை இசை எல்லாம் வந்துவிட்டது. ஒரே குழப்பம். திடீரென கருமுட்டையை காணோம் என்று சொல்கிறார்கள். இந்த கதைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. எதையோ சொல்லி குழப்பி வைத்திருக்கிறார்கள். கடைசியாக பார்த்தால் பெண் கல்வி என்று சொல்லி ஈயம் பூசுகிறார்கள். விமர்சனம் பார்ப்பதற்கு குழப்பமாக இருக்கிறதே? படம் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் என்று ப்ளு சட்டை மாறன் அதில் கூறியிருக்கிறார்.





