தமிழ் சினிமா துறையில் நடிகர்கள் சங்கம் இயக்குனர்கள் சங்கம் பெப்ஸி தொழிலாளர் அமைப்பு தயாரிப்பாளர் சங்கம் வினியோகஸ்தர் சங்கம் உள்ளிட்டவை செயல்படுகின்றன. அதே போல் திரைப்பட எழுத்தாளர் சங்கமும் உள்ளது. இதன் கௌரவ தலைவராக முன்னாள் தலைவர் மறைந்த இயக்குனர் கே பாக்யராஜ் சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று சென்னையில் நடந்தது. இதில் நம்ம கே பாக்யராஜ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு இயக்குனர் சேரன் தலைமையில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இயக்குனர்கள் சமுத்திரக்கனி ஆர் சுந்தர்ராஜன் மற்றும் கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் அடங்கிய அணி போட்டியிட்டது.
அதேபோல் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் அணி என்ற சார்பில் தலைவர் பதவிக்கு விசி குகநாதன் உள்ளிட்டோர் அணி எதிர்த்து போட்டியிட்டது. துணைத் தலைவர்கள் பொதுச் செயலாளர் பொருளாளர் இணைச் செயலாளர் என மொத்தம் 21 பொறுப்புகளுக்கு இரு அணிகள் சார்பாகவும் போட்டியிட்டனர். இதில் கடும் போட்டி நிலவியது.
சங்கத்தில் மொத்தம் உள்ள 692 உறுப்பினர்களில் 483 பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நேற்று காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல் மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பலரும் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குகள் நேற்று மாலையே எண்ணப்பட்டது. ஓட்டுகள் அடிப்படையில் நம்ம கே பாக்யராஜ் அணி சார்பில் போட்டியிட்ட இயக்குனர் சேரன் அதிக ஓட்டுகள் பெற்று தலைவராக தேர்வானார். செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் துணை தலைவர்களாக சமுத்திரக்கனி ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மொத்தம் பதிவான 432 ஓட்டுக்களில் சேரன் 279 ஓட்டுக்கள் பெற்று இயக்குனர் சேரன் தலைவராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விசி குகநாதன் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குனர் சேரன் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு இந்த பதவியில் இருந்தவர் இயக்குனர் கே பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.





