- Advertisement -
Homeபொழுதுபோக்குதெருநாய்களுக்கு பிஸ்கட் பிடிக்குமா? பிரியாணி பிடிக்குமா? - பொதுமக்களுக்கு எது பிடிக்கும்? எக்குத்தப்பாக பேசி சர்ச்சையில்...

தெருநாய்களுக்கு பிஸ்கட் பிடிக்குமா? பிரியாணி பிடிக்குமா? – பொதுமக்களுக்கு எது பிடிக்கும்? எக்குத்தப்பாக பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!

- Advertisement -

கடந்த 12ம் தேதி காலை 10 மணிக்கு வீடியோ ஒன்றை வெளியிட்ட நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் நான் அரசியலுக்கு வரலாம் என்று இருக்கிறேன். என் அம்மா அதற்கு ஒப்புதல் தந்துவிட்டார். ஆனால் என் ரசிகர்கள் நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்று சொல்லுங்கள். அதன்படி முடிவு செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, நான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்து நிறைய ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து இருக்கிறார்கள். நான் யார் பக்கம் செல்வேன் என்பது சஸ்பென்ஸ். நல்ல முடிவை எடுத்திருக்கிறேன்.

- Advertisement -

விரைவில் எனது ரசிகர்களை கூட்டி நல்ல முடிவை அறிவிப்பேன். என் அம்மாவை மேடையில் உட்கார வைத்துவிட்டு அவரது முன்னிலையில் என்னுடைய முடிவை நான் விரைவில் சொல்வேன். தவெக ஆட்சி நன்றாக இருக்கிறது. கோயில்கள் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடியதற்கு பாராட்டுக்கள்.

யாராவது புது ஆள் வந்தால் ரோட்டில் இருக்கும் தெரு நாய் கூட கத்தும். அந்த தெருநாய்க்கு பிடித்த பிஸ்கட் போட வேண்டும். சில தெரு நாய்களுக்கு பிஸ்கட் பிடிக்காது. பிரியாணி தான் பிடிக்கும். அந்த தெரு நாய்க்கு பிடித்ததை போட்டு அது நம்மை பார்த்து கத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள ஒரு நாய்க்கு இப்படி என்றால், ஒரு நாட்டை கொடுத்திருக்கிறீர்கள்.

- Advertisement -

கொஞ்ச நேரம் கால அவகாசம் கொடுங்கள். பாசிட்டிவ் ஆக யோசியுங்கள். மாற்றம் வந்துவிட்டது. அதற்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் பேசினார். தெருநாய்களுடன் ஒப்பிட்டு மக்களை பேசியது இணையத்தில் ராகவா லாரன்ஸ் மீது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் விஜயின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் எல்லாம் தெரு நாய்களா? மக்களை தெருநாய்களோடு ஒப்பிட்டு இவர் பேசலாமா? இவருக்கு இப்படி பேச எங்கிருந்து துணிச்சல் வந்தது. இப்படி இவர் தாறுமாறாக பேசுவதற்கு என்ன காரணம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறுவதால் இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

- Advertisement -

சற்று முன்