- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா நடிக்க மறுத்த சூப்பர் ஹிட் படங்கள் - அட லிஸ்ட் பெருசா இருக்குதே?...

நடிகர் சூர்யா நடிக்க மறுத்த சூப்பர் ஹிட் படங்கள் – அட லிஸ்ட் பெருசா இருக்குதே? அதுவும் விஜய் நடித்த அந்த பிளாக் பஸ்டர் படத்தை சூர்யா மிஸ் பண்ணிட்டாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. பல படங்கள் பலத்த தோல்வியை சந்திக்கின்றன. இது வழக்கமானதுதான். இருப்பினும் சில படங்களின் வெற்றி அந்த படங்களில் நடித்த ஹீரோக்களின் இமேஜை பல மடங்கு உயர்த்தி உச்சத்துக்கு கொண்டு சென்று விடுகிறது. சில படங்கள் அப்படி ஒரு அற்புதமான வரமாக நடிகர்களுக்கு மாறி விடுகின்றன.

குறிப்பாக நடிகர் விஜய் நடித்த படங்களில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி படம் விஜய்க்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக இருந்து. அவரது சினிமா கேரயரில் ஒரு முக்கியமான இடத்துக்கு அவரை கொண்டு சென்றது. துப்பாக்கி படம் 2ம் பாகமாக வெளிவருமா என்பது இன்று வரை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

இப்படி வெற்றிப் படங்களில் நடிக்க வாய்ப்பு வரும்போது சில நடிகர்கள் ஏதேனும் சில காரணங்களால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போகிறது. ஒருவேளை ஏற்கனவே வேறு படங்களில் அவர்கள் கமிட் ஆகி இருந்தால் குறிப்பிட்ட நாட்களில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த படங்களில் நடிக்க முடியாமல் போகலாம். அந்த படத்தில் சம்பளம் மிக குறைவாக இருப்பதும் அந்த இயக்குனர் மீது உள்ள நம்பிக்கையின்மையாலும் அந்த படத்தை நிராகரிக்கலாம். படத்தின் கதை திருப்தி தராத பட்சத்திலும் அந்த படத்தை அவர்கள் புறக்கணிக்கலாம்.

இப்படி பல காரணங்களால் புறக்கணிக்கப்படும் சில படங்கள் மாஸ் ஹிட் படங்களாக மற்ற நடிகர்களுக்கு அமைந்து விடுகின்றன. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிக்க வேண்டிய சில படங்கள் அவர் நடிக்க மறுத்து விட்டதால் வேறு நடிகர்கள் நடித்து மாபெரும் ஹிட் படங்களாக ஜெயித்திருக்கின்றன. அந்த வகையில் கஜினி ஏழாம் அறிவு வெற்றியை தொடர்ந்து துப்பாக்கி படத்தில் நடிகர் சூர்யாவை நடித்து வைக்க ஏஆர் முருகதாஸ் முயற்சித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் சூர்யா தரப்பில் அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. அதேபோல் வசந்த் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த ஆசை படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் சூர்யா தான். ஆனால் அந்தப் படத்திலும் நடிக்க மறுத்துவிட்டார். ஆசை படம் அஜீத்குமாருக்கு ஒரு மாபெரும் அடையாளம் தந்த படமாக இருந்தது. ஆசை நாயகன் என்றே அவரை அழைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் துருவ நட்சத்திரம் படத்தின் முதலில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்து விலகிய பிறகுதான் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்தார்.

ஷாம் அருண் விஜய் நடித்த இயற்கை படத்திலும் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அவர் மறுத்த நிலையில் பிறகு ஷாம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் விட மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படத்தில் முதலில் நடிக்க வாய்ப்பு வந்தது நடிகர் சூர்யாவுக்கு தான். அவர் நடிக்க மறுத்த நிலையில் தான் அந்த படத்தில் பிருத்விராஜ் நடித்தார். இப்படி நடிகர் சூர்யா நடிக்காமல் தவற விட்ட இந்த படங்கள் எல்லாம் பிறகு மற்ற ஹீரோக்களுக்கு முக்கிய வெற்றி படங்களாக அமைந்துவிட்டன என்பது இதில் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்