- Advertisement -
Homeபொழுதுபோக்குதென்னிந்திய சினிமா கிட்ட இருந்து பாலிவுட் சினிமா இதை முதல்ல கத்துக்கணும் - நடிகை காஜல்...

தென்னிந்திய சினிமா கிட்ட இருந்து பாலிவுட் சினிமா இதை முதல்ல கத்துக்கணும் – நடிகை காஜல் அகர்வால் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக அவர் வலம் வருகிறார். தற்போது காஜல் அகர்வால் நடித்த புதிய படம் தி இந்தியா ஸ்டோரி படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக காஜல் அகர்வால் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமா குறித்து அவர் கூறிய சில கருத்துக்கள் இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளன. தமிழில் நான் மகான் அல்ல பழனி மாற்றான் துப்பாக்கி ஜில்லா விவேகம் கோமாளி இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இப்போது தயாரிப்பாளர் சாகர் பி ஷிண்டே தயாரிப்பில் டி கே சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள தி இந்தியா ஸ்டோரி திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஸ்ரேயாஸ் தல்படேவுடன் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளார். ஜி ஸ்டுடியோஸ் வெளியிடும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, நான் அதிக படங்களில் நடிப்பதை விட தரமான படங்களிலேயே நடிக்க அதிகம் விரும்புகிறேன். எனக்கு தேவையான வலுவான கதாபாத்திரங்கள் தென்னிந்திய சினிமாவில் அதிகம் கிடைத்ததால் நல்ல கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்தேன்.

- Advertisement -

பாலிவுட் சினிமா தென்னிந்திய சினிமாவிடம் இருந்து நேரம் தவறாமையை கற்றுக்கொள்ள வேண்டும். தென்னிந்திய திரை உலகில் நேரத்தையும் ஒழுக்கத்தையும் மிகவும் மதிக்கிறார்கள். மேலும் தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வலுவான கதாபாத்திரங்கள் எழுதப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று நடிகை காஜல் அகர்வால் அப்போது கூறியிருக்கிறார்.

இந்தியை தாய்மொழியாக கொண்டவர் காஜல் அகர்வால். மும்பையை சேர்ந்தவர். அவரது தந்தையும் இந்தி படங்கள் தயாரிப்பவர்தான். சிறுவயதில் இருந்தே இந்தி படங்களையும் மும்பையிலும் வாழ்ந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் எப்போதுமே தமிழ் படங்கள் குறித்தும் தமிழில் உருவாகும் சிறந்த பெண்களுக்கான கதைகள் குறித்தும் பாராட்டி பேசி வருகிறார். இந்தி சினிமாவை விட பல விதங்களில் தமிழ் சினிமா உயர்ந்ததும் என்றும் பலமுறை அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்