தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கி அட்லூரி. தற்போது நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தொலி பிரேமா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கி அட்லூரி.
தனது முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றார். தொடர்ந்து மிஸ்டர் மஜ்னு ரங் தே போன்ற படங்களை இயக்கினார். கடந்த 2023ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குனராக கவனம் பெற்றார்.
வாத்தி திரைப்படம் போதிய வெற்றியை பெறாத நிலையிலும் அடுத்து அவர் நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவரது திரைப்பட பயணத்தில் முக்கிய படமாக லக்கி பாஸ்கர் அமைந்தது.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். குடும்ப உறவுகளையும் ஆக்சனையும் கொண்டு உருவான இந்த படத்தில் மமீதா பைஜூ ராதிகா சரத்குமார் ரவீனா தாண்டன் பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 13ம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கி அட்லூரி கூறியதாவது, வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஆனால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் தமிழில் மட்டுமே உருவாக்கப்பட்டு பின்னர் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது.
சூர்யாவுடன் ஒரு நேரடி தமிழ் படம் எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த விருப்பம் இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. வாத்தி படத்தின் மூலம் மூலம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டோம். வாத்திக்கு பிறகு தெலுங்கில் தனுஷின் ரசிகர்கள் கணிசமாக அதிகரித்ததை நாங்கள் கவனித்தோம். அதுவும் இந்த படத்தை உருவாக்குவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்று வெங்கி அட்லூரி கூறியிருக்கிறார்.





