மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 6 மாதங்கள் தாமதமாக நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரிலீஸான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ஜனநாயகன் படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் இது ஒரு குத்துமதிப்பான வசூல் நிலவரம் தான்.
எப்போதுமே முதல் நாளில் சொல்லப்படும் வசூல் நிலவரம் கணக்கு காட்டும் ஒரு வசூல் நிலவரமாகவே இருக்கும். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் 27 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வந்த படங்களில் தமிழ்நாட்டில் முதல் நாளில் மிகவும் குறைவான வசூல் செய்த படம் தி கோட் தான். ஆனால் அந்த படம் கூட 29 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. ஆனால் இப்போது வெளிவந்த ஜனநாயகன் படம் தமிழ்நாட்டில் மொத்தம் 27 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. தி கோட் படத்தை விட ரூ. 2 கோடி குறைந்துள்ளது.
ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனால் குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டத்தை வெகுவாக அது குறைத்து விட்டது. மேலும் இணையத்தில் ஜனநாயகன் படம் லீக் ஆனதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த 2 விஷயங்களையும் தாண்டி ஜனநாயகன் படம் முதல் நாளில் 27 கோடி ரூபாய் வசூலித்ததே பெரிய சாதனைதான்.
அடுத்து 2வது நாளில் ஜனநாயகன் தமிழ்நாட்டில் மொத்தம் 13 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அப்செட் ஆகிவிட்டனர். ஆனால் சனி ஞாயிறு தினங்களில் மீண்டும் பிக்கப் ஆகி சனிக்கிழமை 22 கோடி ஞாயிறு 23 கோடி ரூபாய் என மீண்டும் வசூல் பிக்கப் ஆகிவிட்டது. எனினும் ஆந்திரா கேரளா கர்நாடகா மாநிலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு ஜனநாயகனுக்கு வசூல் நிலவரம் இல்லை.
ஜனநாயகன் படத்தின் மிகப்பெரிய மைனஸ் 3 மணி நேரம் படம் ஓடுகிறது. அதுவும் ஆந்திராவில் இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் மிகவும் அப்செட் ஆகிவிட்டனர். ஏனென்றால் பகவந்த் கேசரி படத்தில் தமிழ் வடிவம் தான் ஜனநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜயின் ஜனநாயகன் படம் பெரிய அளவில் வசூலிக்காது. தமிழ்நாட்டிலேயே 85 கோடி ரூபாய் தான் ஷேர் கிடைக்கும் என்று மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





