தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக நடிகராக வலம் வந்தவர் விஜய். கடந்த 10 15 ஆண்டுகளில் அவர் உச்ச நட்சத்திரமாக மாறி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 250 கோடி வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் விஜய் தான் என்பதும் கவனிக்கத்தக்கது.
அதேபோல் விஜய் நடித்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வசூலை குவித்தன. நடிகர் விஜய் நடித்த தேவா வசந்தவாசல் செல்வா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுவாதி. எனது முதல் ஹீரோ என்று விஜயுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் நடிகை சுவாதி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகை சுவாதி கூறியதாவது, என்னுடைய முதல் ஹீரோ இளைய தளபதி விஜய். அன்பான நடிகராக தொடங்கிய உங்களது பயணம் இன்று மாண்புமிகு முதலமைச்சர் என்கிற நாற்காலியை அலங்கரிக்கும் வரை வளர்ந்து இருப்பதை பார்ப்பது எனக்கு எவ்வளவோ பெருமையாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது.
வெள்ளித்திரையில் எங்களை மகிழ்வித்த நீங்கள் இன்று மக்கள் சேவைக்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர்கள். திரையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரு தலைவனாக நீங்கள் முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள். உங்களது இந்த புதிய அத்தியாயத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் சிஎம் சார்.
உங்களை நேரில் சந்தித்து எனது வாழ்த்துகளை தெரிவிக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் ரசிகர்களும் நீங்கள் எப்போது மீண்டும் விஜயை சந்திப்பீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்த நாள் விரைவில் வரும் என்று நான் நம்புகிறேன் என்று அந்த பதிவில் நடிகை சுவாதி கூறியிருக்கிறார்.
நடிகை சுவாதி ஆரம்பத்தில் விஜயுடன் 3 படங்களில் நடித்த நிலையில் பிறகு விஜய் நட்சத்திர நடிகரான பிறகு அசின் திரிஷா சிம்ரன் சமந்தா போன்றவர்களுடன்தான் அதிக படங்களில் நடித்தார். சுவாதியும் பெரிய அளவில் சினிமாவில் ஜெயிக்கவில்லை. தமிழில் சொக்கத்தங்கம் படத்தில் பிரகாஷ் ராஜின் தங்கையாக அவர் கடைசியாக நடித்திருந்தார்.





