நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படம் தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் வெர்ஷனை பாலா இயக்கியிருந்தார். ஆனால் படக்குழுவுக்கும் துருவ் விக்ரமுக்கும் திருப்தி தராததால் அதை அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்யவில்லை. இரண்டாவது வெர்ஷன் ஆதித்யா வர்மா படமும் பெரிய வரவேற்பு பெறவில்லை.
அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் துருவ் விக்ரம் நடித்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த 2 படங்களுக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் காளமாடன் என்ற படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகர் பசுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இதற்கிடையே பைசன் படத்தில் நடித்த போது அனுபமா பரமேஸ்வரனுடன் துருவ் விக்ரமுக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாக கூறப்பட்டது.
இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாகவும், நெருக்கமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதனால் அவர்களது காதல் முடிவுக்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, நடிகர் துருவைப் பொறுத்தவரை கதையை முடிவு செய்வதில் ஒரு குழப்பம் இருக்கிறது. நமக்கான கதையை மாரி செல்வராஜ் கேட்டு அவர் முடிவு செய்யட்டும் என்று நினைக்கிறார். அவர்தான் குரு. காட்பாதர். அதில் ஏதோ ஒரு குழப்பம் நிலவுவதாக தெரிகிறது. இப்போது ஒரு படத்தில் துருவ் விக்ரம் கமிட்டாகி இருக்கிறார்.
இதற்கிடையே தெலுங்கு பட நிறுவனம் ஒன்றில் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். ஆனால் அதில் ஏதோ பிரச்சனையாகி இப்போது அவர் மீது அங்கே சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். இதை எல்லாம் முதலில் யோசிக்க வேண்டும். ஒன்று அட்வான்ஸ் வாங்க கூடாது. அப்படி வாங்கிய பிறகு கண்டிப்பாக நடிக்க வேண்டும். எப்படியும் இந்த பிரச்னையை தீர்த்து விடுவார்கள். இருந்தாலும் இதனால் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்று அந்தணன் கூறியிருக்கிறார்.





