தமன்னா சமீப காலமாக திரைப்படங்களிலும் வெப் சீரீஸ்களிலும் படு கவர்ச்சியாக வலம் வருகிறார். சமீபத்தில் அமேசாமன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்த “ஜீ கர்டா” என்ற வெப் சீரீஸில் ஒரு காட்சியில் மிகவும் தாராளமாக நடித்திருந்தார். அந்த காட்சி இணையத்தில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “நம்ம தமன்னாவா இது?” என்று ரசிகர்கள் வாயை பிளந்தனர்.

“ஜீ கர்டா” வெப் சீரீஸை தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸில் வெளியான “லஸ்ட் ஸ்டோரீஸ் 2” திரைப்படத்தில் தமன்னா நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானபோதே தமன்னா ரசிகர்கள் குஷி ஆனார்கள். அதே போல் அத்திரைப்படத்தில் பல முத்த காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் தமன்னா கூச்சம் இல்லாமல் நடித்திருந்தார்.
அது மட்டுமல்லாது “ஜெயிலர்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “காவாலயா” பாடலில் கண்களை கவரும் வண்ணம் நடனமாடி பல ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தினார். இவ்வாறு சமீப காலமாக தமன்னா ஒரு மாதிரியாகவே இருக்கிறார்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தமன்னாவை குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். “ தமன்னா ஜீ கர்டா வெப் சீரீஸிலும், லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். வெப் சீரீஸில் சுமார் அரை மணி நேரம் உரித்த கோழியாக தமன்னா காட்சி தருகிறார். படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார். முத்த காட்சிகள் மட்டுமே ஐந்தாறு முறை திரும்ப திரும்ப அதில் இடம்பெற்றிருந்தன.
இது பற்றி விசாரித்ததில் தமன்னா வழக்கமாக ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் ஜி கர்டா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் ஆகியவற்றில் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு 7 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார். இரண்டு கோடி சம்பளம் அதிகமாக கொடுத்தால் காட்டக்கூடாததை எல்லாம் காட்டுவதற்கு தயாராகிவிட்டார் தமன்னா” என்று தனது வீடியோ ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.





