இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நடித்த போதே அவரை பலரும் உருவக்கேலி செய்தனர். இதெல்லாம் ஒரு முகமா என கேலி பேசினர். நடிகர் விஜயை தவறாக விமர்சித்த பிரபல வார இதழ் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட ஒரு சம்பவம் கூட அப்போது நடந்தது.
எனினும் நடிகர் விஜய் போராடி நடிப்பில் நடனத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி பல வெற்றிப் படங்களை கொடுத்து நட்சத்திர நடிகராக மாறினார். எனினும் அவர் நல்ல நடிகர் என்று அவரது ரசிகர்களை தவிர மற்றவர்கள் இப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது ஏறக்குறைய உண்மைதான்.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து விஜய் அரசியல் களத்தில் குதித்தது முதல் இன்று வரை விஜய் மீதான கடும் விமர்சனங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. நடிக்கவே தெரியாத ஒரு ஆளுக்கு தலைவன் பொறுப்பை எப்படி கொடுக்கலாம்? நல்ல கணவராக நல்ல தந்தையாக இல்லாத விஜயை ஒரு நாட்டின் தலைவனாக அனுமதிக்கலாமா என்றுகூட தேர்தல் நேரத்தில் பலரும் விமர்சித்தனர்.
ஆனால் இதுபோன்ற கடுமையான விமர்சனங்களை எல்லாம் கடந்து கடந்த தேர்தலில் 1.70 கோடி ஓட்டுகளை பெற்று 108 தொகுதிகளில் வென்று முதல்வர் விஜய் ஆட்சி செய்து வருகிறார். எனினும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போன்றவர்கள் தொடர்ந்து விஜய் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்து அவரது செயல்பாடுகள் திருப்தியில்லை என்று பேசி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாவது, இப்பவும் என் கணிப்பு தவறவே இல்லை. நான் நினைத்ததை விட ரொம்பவும் மோசமாக விஜய் இருக்கிறார். இவரை அந்த இடத்தில் அமர வைத்து இருக்கவே கூடாது. மூணு மாசத்துல அரசாங்கத்துல என்ன நடந்திருக்கு?
அதிகாரிகள் அவங்கவங்க வேலை செஞ்சுட்டு இருக்கறதால தான் எல்லாம் அப்படியே போயிட்டு இருக்கு. எதுவுமே முன்னேறலே. இவர் ஆட்சி அத்திப்பழ புழு மாதிரி தான். அத்திப்பழம் மலரா இருக்கச் சொல்லவே புழு உருவாகிவிடும். அந்த புழு வாழ்க்கை அங்கேயே தொடங்கி அங்கேயே முடிந்துவிடும். அப்படித்தான் இந்த அரசும் உயிரோடு இருக்கு. ஆனால் செயல்படவில்லை. யாருக்கும் எந்த பயனும் இந்த ஆட்சியில் இல்லை என்று ஜேம்ஸ் வசந்தன் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





