- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போது என்னை நிராகரித்தார்கள், அதுதான் நான் சினிமாவில் நடிக்க காரணம் - ஓபனாக பேசிய பிளாஸ்ட்...

அப்போது என்னை நிராகரித்தார்கள், அதுதான் நான் சினிமாவில் நடிக்க காரணம் – ஓபனாக பேசிய பிளாஸ்ட் பட நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

- Advertisement -

நடிகர் கவின் நடித்த ஸ்டார் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான முதல் படம் அதுதான். இப்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமான ஒருவராக மாறியிருக்கிறார். நாக்ஜில்லா சர்வம் மாயா கண்ணப்பா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் படங்களில் ப்ரீத்தி முகுந்தன் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த மாதம் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிகை அபிராமி நடித்த பிளாஸ்ட் படம் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன் மகள் கேரக்டரில் ப்ரீத்தி முகுந்தன் அதிரடியான சண்டை காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.

- Advertisement -

பிளாஸ்ட் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்து ப்ரீத்தி முகுந்தன் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார். பிளாஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு மேலும் பல படங்களில் ஆக்சன் கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

மாடலிங் துறையில் இருந்து சினிமா உலகுக்குள் வந்தவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். தனது சினிமா பயணத்தின் தொடக்கத்தில் அவர் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை பற்றி பேசி இருக்கிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன் கூறியதாவது, நான் மாடலிங் செய்து கொண்டிருந்த போது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அப்போது எனக்கு வயது 18. ஆனால் என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. என்னை நானே அவமானப்படுத்திக் கொள்வேன். எனக்கு நடிக்க தெரியாது என்று பல்வேறு பயங்களுடன் நான் இருந்தேன். அந்த சூழலில் என் பெற்றோர் நேரடியாக நான் படித்த கல்லூரி விடுதிக்கு நேரில் வந்து என்னிடம் பேசினார்கள்.

நீ ஏன் முயற்சி செய்யக் கூடாது? பரவாயில்லை. இதுதான் தொடக்கம். நீ முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி ஆடிஷனுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களின் அந்த வார்த்தைகள் தான் எனக்கு முதல் அடியை எடுத்து வைக்க தைரியம் தந்தது. அந்த முதல் ஆடிஷனில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அந்த அனுபவம் தான் சினிமா மீது எனக்கு ஒரு உண்மையான காதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது என்று ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்