கடந்த 1990களில் மின்னலே அலைபாயுதே ரன் டும்டும்டும் படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் மாதவன். சாக்லேட் பாய் என்றும் மேடி என்றும் பெண் ரசிகைகளால் கொண்டாடப்பட்டவர். இப்போது கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் பயோபிக் படமான ஜிடிஎன் படத்தில் மாதவன் ஜிடி நாயுடு கேரக்டரில் நடித்திருக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் நாளை 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்ட ஜிடி நாயுடுவின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது, கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்த படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார்.
ஜிடிஎன் படத்தில் ஷீலா பிரியாமணி துஷாரா விஜயன் அதிதி பாலன் பிரிகிடா கனிகா என ஆறு பேர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். ஆனால் கதைப்படி இவர்கள் அனைவருமே மாதவனுக்கு ஜோடி இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஜிடி நாயுடுவின் முதல் மனைவியாக பிரியாமணி நடித்திருக்கிறார்.
ஜிடி நாயுடுவின் 2வது மனைவியாக துஷாரா விஜய் நடித்திருக்கிறார். இந்த 2 பேர் மட்டுமே மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். சின்ன வயது ஜிடி நாயுடுவாக டிஜே அருணாச்சலம் படத்தில் வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷீலா நடித்திருக்கிறார். அதாவது மாதவனின் சின்ன வயது கேரக்டருக்கு ஜோடியாக ஷீலா நடித்திருக்கிறார். கிராமத்து பெண்ணாக பிரிகிடா இந்த படத்தில் வருகிறார்.
அரசு அதிகாரியான ஜெயராமுக்கு ஜோடியாக கனிகாவும் ஜிடி நாயுடு என்பவர் யார் என்பதை விளக்கி இன்றைய தலைமுறைக்கு சொல்லும் ஒரு கேரக்டரில் அதிதி பாலனும் நடித்திருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் படத்தில் 6 கதாநாயகிகள் இருந்தாலும் மற்ற 4 பேரும் மாதவனுக்கு ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் கோவையில் வாழ்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு பயன்படுத்திய பொருட்கள் அவரது புகைப்படங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு ஜிடி நாயுடு குடும்பத்தினரே உதவி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிடிஎன் என்ற பெயரில் வெளியாகும் இந்த படம் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை சொல்லும் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





