தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் ரசிகர்களின் அன்றைய கனவுக்கன்னியாக அவர் இருந்தார். ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் சரத்குமார் என நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நயாகியாக வலம் வந்தார்.
இயக்குனர் சுந்தர் சியை காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகை குஷ்புவுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. முதலில் திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். இப்போது பாஜக கட்சியில் மாநில துணைத் தலைவராக நடிகை குஷ்பு இருந்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை குஷ்பு கூறியதாவது, என்னுடைய நெருங்கிய நண்பர்கள், என்ன விஷயம் என்றாலும் இவர்களுடன் உடனே ஷேர் செய்துக்கொள்வேன் என்றால் அவர்கள் இந்த 5 பேர் மட்டும்தான். அவர்கள் சுஜாதா விஜயகுமார் பிருந்தா மாஸ்டர் சுப்பு பஞ்சு அனு பார்த்தசாரதி சுஹாசினி மேடம் இவர்கள்தான் என்னுடைய நெருங்கிய நண்பர்கள்.
அதனால் தான் என்னுடைய கையில் அந்த 5 பேருடைய இன்ஷியலை பச்சை குத்தியிருக்கிறேன். வலதுகையில் என்னோட பசங்க பேர் இருக்கு. இந்த கையில் என்னோட பிரண்ட்ஸ் பேர் இருக்கு. அவங்களோட இன்ஷியல் இருக்கு. பச்சை குத்தற அளவுக்கு என்ன பண்ணினாங்க என்றால் அவங்க எனக்கு எதுவும் பண்ண வேண்டும் என்று தேவை இல்லை.
எனக்கு எப்பவும் என்கூட இருக்காங்க. எனக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் நான் போன் செய்து ஹலோ என்று சொன்னாலே அதில் அவர்கள் எனக்கு ஏதோ பிரச்னை என்பதை தெரிந்துக்கொள்வார்கள். ஹலோ என்று சொல்வதை வைத்தே கண்டுபிடிச்சிடுவாங்க. என்ன ஆச்சு என்று உடனே கேட்பார்கள்.
அதுக்காக டெய்லி அவங்க கூட பேசணும் என்றெல்லாம் இல்லை. தினமும் காலையில் எல்லோரும் குட்மார்னிங் சொல்லிக்குவோம். டெக்ஸ் மெசேஜ் பண்ணிக்குவோம். ஆனா நைட் 2 மணிக்கு போன் செஞ்சால் கூட எனக்கு என்ன பிரச்னைன்னு காது கொடுத்து கேட்பாங்க என்று அந்த நேர்காணலில் நடிகை குஷ்பு கூறியிருக்கிறார்.





