ஒரு படத்தில் நடிக்க ரூ. 185 கோடி சம்பளம் கேட்ட நடிகர் அஜீத்குமார் எந்த தயாரிப்பாளரும் முன்வராத நிலையில் இப்போது அவரே தனது பெயரில் தனது 64வது படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டார். டேர் டெவில் என்ற அந்த படத்தை தனது மனைவி ஷாலினி பெயரில் அஜீத்குமாரே சொந்தமாக தயாரிக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலோ துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் அஜீத்குமாரின் சினிமா பிஸினஸ் மொத்தமே ரூ. 175 கோடி தான் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அந்த அடிப்படையில் பார்த்தால் ரூ. 175 கோடியில் 75 கோடியில் படத்தின் தயாரிப்பு செலவு மற்ற நடிகர்கள் நடிகைகள் இசையமைப்பாளர் சம்பளம் என அடக்கினால் மட்டுமே அஜீத்குமாருக்கு ரூ. 100 கோடியாவது சம்பளமாக கிடைக்கும். ஒருவேளை தயாரிப்பு செலவு எகிறினால் அஜீத்குமாரின் சம்பளம் தானாகவே குறைந்து விடும்.
நடிகர் அஜீத்குமார் கடந்த பல ஆண்டுகளாகவே அவர் நடித்த படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டார். அவர் நடித்த படம் சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார். ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் போன்ற உச்ச நட்சத்திர நடிகர்களே தங்களது படத்தை பிரமோசன் செய்ய இசை வெளியீட்டு விழாக்களில் பங்கேற்ற நிலையில் அஜீத்குமார், அந்த விஷயத்தில் பெரிய கெத்து காட்டினார்.
ஆனால் இனிமேல் அப்படி எல்லாம் பழைய கெத்து காட்டினால் அவரது படம் ரூ. 175 கோடி வியாபாரம் கூட நடக்காது. அதனால் தயாரிப்பாளராக அஜீத்குமார் மாறி உள்ளதால் இனி அவரே களத்தில் இறங்கி தனது ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேசினால் ஓரளவுக்கு படத்துக்கு லாபமும் கிடைக்கும். ரசிகர்களின் கூட்டமும் வரும்.
ஆரம்பத்தில் நடிகை நயன்தாராவும் பல படங்களில் நடித்த போது பிரமோசன் நிகழ்ச்சிகளை தவிர்த்தார். பிறகு அவரே ரவுடி பிக்சர்ஸ் சார்பில் சொந்தமாக படம் தயாரித்த போது பிரமோசன்களுக்கு தானாகவே வந்தார். அதனால் இனி அஜீத்குமாரும் ஊர் ஊராக சென்று ரசிகர்களை சந்தித்து பேசினால் தான் அவரது படங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என்ற சூழல் உருவாகி உள்ளது.





