முன்னாள் திரைப்பட நடிகர் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர் விஜய் கடந்த 1999ம் ஆண்டில் சங்கீதாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இதில் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
விஜய் தமிழக முதல்வர் ஆவதற்கு முன்பு தீவிரமாக அரசியல் களத்தில் பிரச்சாரம் செய்து வந்த நேரத்தில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தங்களது பிரிவுக்கு பின்னணியில் ஒரு நடிகையின் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இருதரப்பு வழக்கறிஞர்களும் விஜய் சங்கீதா இருவரும் ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜராக கோரிக்கை விடுத்தனர். வீடியோ கான்பரென்சிங் விசாரணை இல்லை என்று அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் 7ம் தேதி (இன்று) வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் அன்று உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று 7ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. சட்டசபையில் கூட்டம் நடப்பதால் விவாகரத்து வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்குமாறு முதல்வர் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் இன்றே விசாரணை செய்ய வேண்டும் என்றும் வீடியோ கான்பெரன்சிங் வாயிலாக ஆஜரான சங்கீதா வைத்த கோரிக்கையை ஏற்று பிற்பகலுக்கு விசாரணையை ஒத்திவைத்து செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பிறகு மதியம் 1 மணிக்கு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டது. பிறகு வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று மதியம் எடுக்கப்பட்டது.
அப்போது சங்கீதா தரப்பில் தன்னுடைய கணவரும் தமிழக முதல்வருமான விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவர் திரும்ப பெற்றார். இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் அறிவித்துள்ளது. முதல்வர் விஜயிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றது தவெக கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.





