- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய நடிகை நயன்தாரா - அதில்...

திடீரென டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய நடிகை நயன்தாரா – அதில் நான் கெட்டிக்காரி இல்லை, அவர் செய்த ஒரு போன்தான் இதற்கு காரணம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக மாறிய பிறகு நயன்தாரா பட விழாக்களில் பெரும்பாலும் கலந்துக்கொள்வதை தவிர்த்து வந்தார். அவர் நடித்த படங்களின் பாடல் வெளியீட்டு விழா பிரமோஷன் நிகழ்வுகளுக்கு கூட நடிகை நயன்தாரா வராமல் இருந்தார். தனது படம் குறித்து எந்த நேர்காணலிலும் அவர் பேசி விளம்பரம் செய்ய மாட்டார். இதை ஒரு பாலிசியாகவே நயன்தாரா கடைபிடித்து வந்தார்.

ஆனால் சமீபத்தில் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கிய எல்ஐசி படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்த நயன்தாரா அந்த படத்தின் விழாவில் பங்கேற்று இருந்தார். இதே போல் அவர் நடிக்கும் மற்ற படங்களுக்கும் இதுபோல வந்திருந்தால் படத்தின் இமேஜ் மார்க்கெட் இன்னும் அதிகரித்திருக்கும்.

- Advertisement -

ஆனால் நயன்தாரா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படங்களுக்கு மட்டுமே கணிசமான லாபம் பார்க்க அந்த படங்களின் பிரமோசன் மற்றும் அதுசார்ந்த விழாக்களில் பங்கேற்க முன்வந்த நயன்தாரா மீது விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்த டாக்ஸிக் படத்தில் அவரது சகோதரியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடந்தது. அப்போது அந்த விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்றது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

வழக்கமாக மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களின் விழாக்களை புறக்கணிக்கும் நயன்தாரா அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து டாக்ஸிக் பட விழாவில் பங்கேற்றது பலத்த கேள்வியை எழுப்பியது. இதுகுறித்து விழா மேடையில் பேசிய நடிகை நயன்தாரா கூறியதாவது, நான் விளம்பர நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அர்த்தமில்லை. அதில் நான் அவ்வளவு கெட்டிக்காரி இல்லை. அதனால் தான் தள்ளி நிற்கிறேன்.

ஆனால் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல காரணங்களால் முக்கியமாக டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க யஷ் ஒரு போன் கால் செய்தார். நான் இதில் கலந்து கொள்வதற்கு அது மட்டுமே போதுமானதாக இருந்தது என்று கூறினார். மேலும் அவர் நடித்த படங்களின் நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் முன்பு பலமுறை இதுபோல் கோரிக்கை விடுத்தும் இதை நயன்தாரா தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்