- Advertisement -
Homeபொழுதுபோக்குபீச்சுல காந்தி சிலைக்கு கீழே தான் தினமும் படுத்து தூங்குவார், தினமும் 40 கி.மீ., சைக்கிளில்...

பீச்சுல காந்தி சிலைக்கு கீழே தான் தினமும் படுத்து தூங்குவார், தினமும் 40 கி.மீ., சைக்கிளில் போய் பிஸ்கட் விற்பார் – நடிகை குஷ்பு இப்படி சொன்னது யாரை பத்தி தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் நட்சத்திர நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இயக்குனர் சுந்தர் சியும் பல வெற்றிப் படங்களை கொடுத்து பல படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திர இயக்குனராக உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை குஷ்பு தனது கணவர் இயக்குனர் சுந்தர் சி குறித்து கூறியதாவது, சென்னைக்கு அவர் வந்த போது அவருக்கு சொந்தமாக வீடு கிடையாது. தங்குவதற்கு இடம் கிடையாது. பீச்சுல இருக்கிற மகாத்மா காந்தி சிலைக்கு கீழே தான் தினமும் நைட் படுத்து தூங்கியிருக்கிறார். அந்த பிளாட்பாரத்துல தான் தூங்குவார்.

- Advertisement -

அங்கிருந்து எந்திரிச்சு காலையில் தேனாம்பேட்டை சிக்னல் வரைக்கும் நடந்து போவார். ஒரு கப் காஃபி சாப்பிடுவதற்காக. அதுக்கு மட்டும்தான் அவர்கிட்ட காசு இருக்கும். பஸ்சுக்கும் காசு இருக்காது. நடந்து போவார். அங்க போய் பப்ளிக் பாத்ரூம்ல குளிச்சிட்டு கிளம்பி அப்படியே கோடம்பாக்கம் ஏரியா எல்லாம் நடந்து போய் சான்ஸ் தேடியிருக்கிறார்.

அப்படி ஒரு கஷ்டமான கடுமையான வாழ்க்கையை கடந்து வந்திருக்கிறார். கோயம்புத்தூர்ல இருந்த போது அவர் தினமும் 40 கிலோ மீட்டர் சைக்கிளில் பெடல் மிதித்து பிஸ்கட் வியாபாரம் செய்திருக்கிறார். தினமும் அப்படி 40 கிலோ மீட்டா் சுத்தி சுத்தி போய் பிஸ்கட் வித்திருக்கிறார். இந்த விஷயம் எல்லாம் பல பேருக்கு தெரியாது.

- Advertisement -

இன்னைக்கு பார்த்தால் சுந்தர் சி பெரிய டைரக்டர். நட்சத்திர நடிகையின் கணவர். சினிமா தயாரிப்பாளர் பெரிய வெற்றியாளர் அவருக்கு என்ன குறை என்றெல்லாம் தோன்றும். ஆனால் அப்படி வந்த அவர் இப்போதும் அதை எல்லாம் மறக்கவில்லை. அப்போது யார் யார் எல்லாம் அவருடன் இருந்தார்களோ அதையும் மறக்கலே.

இப்பவும் அவர் தன்னோட முதல் படத்துல யார் எல்லாம் வேலை செஞ்சாங்களோ அவங்களை இப்பவும் தன் சர்க்கிள்ல வெச்சிருக்கிறார். ஏதாவது ஒரு வேலை கொடுத்து அவங்களை தன்னோட தொடர்புல வெச்சிருக்கார் என்று அந்த நேர்காணலில் நடிகை குஷ்பு, தனது கணவர் சுந்தர் சி குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்