எப்போதுமே சில படங்கள் மட்டும்தான் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறது. குறிப்பாக எங்க வீட்டுப்பிள்ளை அன்பே வா காதலிக்க நேரமில்லை ஊட்டி வரை உறவு தில்லானா மோகனாம்பாள் வசந்த மாளிகை படிக்காதவன் சின்ன தம்பி மைக்கேல் மதன காமராஜன் அமைதிப்படை போன்ற பல படங்களை அப்படி சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் இந்த படங்கள் எல்லாம் எப்போதுமே ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாக இருந்து வருகின்றன. இந்த படங்களின் திரைக்கதையும் காட்சியமைப்பும் பாடல்களும் இசையும் படங்களில் நடித்த கேரக்டர்களும் எப்போதுமே மனதில் நின்று விடுகின்றன. அதனால் தான் அந்த படங்கள் 40 50 ஆண்டுகள் என ஆன போதிலும் ரசிகர்களால் ரசித்து கொண்டாடப்படுகின்றன.
அந்த வரிசையில் கடந்த 1989ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் கரகாட்டக்காரன். கரகாட்டம் கலையை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் உருவான இந்த படத்தை இயக்குனர் கங்கை அமரன் டைரக்ட் செய்திருந்தார். படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார்.
கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் கனகா காந்திமதி சண்முகசுந்தரம் சந்திரசேகர் சந்தானபாரதி கவுண்டமணி செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் சிவாஜி பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் போல ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படம் கரகாட்டக்காரன்.
இப்போது பழைய வெற்றி படங்கள் பல 2ம் பாகமாக உருவாகி வெளியாகின்றன. அதனால் கரகாட்டக்காரன் 2ம் பாகம் வர வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ஏனெனில் இந்த படத்தின் 2ம் பாகம் வெளிவந்தால் மீண்டும் அதே போல் வில்லேஜ் கதைக்களத்தில் ஒரு நல்ல படத்தை பார்த்து ரசிக்கலாம் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் கங்கை அமரன் கூறியதாவது, கரகாட்டக்காரன் 2 படம் பண்ணுவதற்கு கவுண்டமணிக்கு உடல்நிலை சரியில்லை. செந்திலும் தற்போது படம் நடிப்பதில்லை. ராமராஜனுக்கும் உருவம் மாறிவிட்டது. கனகா குண்டாகி விட்டார். அதனால் இவர்களை வைத்து கரகாட்டக்காரன் 2 படம் எடுத்தால் நன்றாக இருக்காது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





