- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஷ்ணு விஷால் மீது பிரபல இயக்குனர் புகார் - ஒரு ஹீரோ இப்படி செய்யலாமா...

நடிகர் விஷ்ணு விஷால் மீது பிரபல இயக்குனர் புகார் – ஒரு ஹீரோ இப்படி செய்யலாமா என வருத்தப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு தந்தார். குறிப்பாக முண்டாசுப்பட்டி இன்று நேற்று நாளை ராட்சசன் மாவீரன் கிட்டு கட்டாகுஸ்தி கட்டாகுஸ்தி 2 அவரது படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனார். இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கவும் முன்வந்தார். பாக்ஸர் ஒருவர் இறுதியில் பவுன்சராக மாறுவதுதான் இந்த படத்தின் கதை.

- Advertisement -

இந்த கதை மிகவும் பிடித்து விட்டதால் இந்த படத்தை இயக்க அருண்ராஜா காமராஜூக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசிய தயாரிப்பாளர் விஷ்ணுவிஷால் மாதந்தோறும் ஒரு தொகையாக இதுவரை 2.5 கோடி ரூபாய் வரை சம்பள பணத்தை தந்துவிட்டார். படத்தை டைரக்ட் செய்ய அருண்ராஜா காமராஜ் காத்திருந்த நிலையில், இப்போது அந்த படத்தில் இருந்து விஷ்ணு விஷால் திடீரென விலகியுள்ளார்.

இதுகுறித்து அருண்ராஜா காமராஜிடம் பேசிய விஷ்ணு விஷால், இந்த கதை எனக்கு ஏற்றதாக இல்லை என்றும் கதை பிடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். கட்டாகுஸ்தி கட்டாகுஸ்தி 2 படங்களில் அபார வெற்றி காரணமாக இப்படி ஒரு மனநிலை மாற்றத்துக்கு விஷ்ணு விஷால் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் அந்த படத்தை மனோ ஆனந்த் என்ற இயக்குனர் டைரக்ட் செய்யப் போவதாகவும் ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து இயக்குனர் அருண் ராஜா காமராஜ், திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் மீது இன்று புகார் அளித்திருக்கிறார்.

மேலும் இடையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவும் அருண்ராஜா காமராஜூக்கு ஒரு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. என் படத்தை எடுத்து முடிக்காமல் நீங்க போகக்கூடாது என்று அதையும் விஷ்ணு விஷால் தடுத்திருக்கிறார். அதனால் அந்த படத்தையும் அவர் இழந்துள்ளார். இந்த சூழலில்தான் அருண்ராஜா காமராஜ் நடிகர் விஷ்ணு விஷால் மீது இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்