- Advertisement -
Homeபொழுதுபோக்குகட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி 12 மணி நேரம் கூட ஆகல… அதுக்குள்ள பஞ்சாயத்து கௌம்பியிருச்சா? -...

கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி 12 மணி நேரம் கூட ஆகல… அதுக்குள்ள பஞ்சாயத்து கௌம்பியிருச்சா? – அட இந்த விஷயத்தை எப்படி தளபதி கவனிக்காமல் விட்டாரு?

- Advertisement -

நடிகர் விஜய், பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை நிலைய செயலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் இருந்த கொடிக்கம்பத்தின் கட்சிக் கொடியை ஏற்றினார். பிறகு கட்சி பாடலை வெளியிட்ட அவர், கட்சியின் மத்தியில் உறுதிமொழி வாசிக்க, கட்சியினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசகேர், ஷோபா சந்திரசேகர், விஜயின் மேலாளர் ஜெகதீஷ் உள்பட தேர்வு செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகள் 300 பேர் மட்டுமே கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் பேசிய விஜய், முதல் அரசியல் மாநாடு குறித்துவிரைவில் அறிவிப்பதாகவும் உறுதியளித்தார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் அறிமுகப்படுத்திய கட்சிக் கொடியின் நடுவில் வாகை மலர், அதற்கு இருபுறங்களிலும் யானைகள் இருக்கும்படியாக கட்சிக்கொடி வடிவமைக்கப்பட்டு இருந்தது, கட்சிக்கொடி அடர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உருவாக்கப்பட்டும் இருந்தது. இந்த கொடிக்கு சுவாரசியமான வரலாற்று குறிப்பு இருப்பதாகவும் விஜய் பேசும்போது குறிப்பிட்டார்.

இந்நிலையில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள யானை சின்னங்களை, விஜய் தனது கட்சியின் கொடியில் பயன்படுத்தியது தேர்தல் விதிமுறை மீறல் என்ற புகார் எழுந்துள்ளது. கட்சி கொடியை அறிமுகப்படுத்தி 12 மணி நேரம் கூட ஆகாத நிலையில் திடீரென சர்ச்சை கிளம்பியிருப்பது விஜய் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பி ஆனந்தன் தனது எக்ஸ் பதிவில், கடந்த 1993ம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அஸ்ஸாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநில அரசியல் கட்சிகளும் எந்த வடிவிலும், கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது.

உண்மை இப்படி இருக்க, இதுபற்றிய தகவல் தெரியாமல் சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் விதிமுறை மீறிய செயலாகும். இது தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே அவரது கட்சி கொடியில் இருக்கும் யானைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்