சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, சினிமாவில் நடிகர்கள் இருக்கும் போது யாரும் அவர்களை சினிமாவை விட்டுட்டு அரசியலுக்கு வாங்க என்று கூப்பிடலே. நீங்களா தான் வந்துருக்கீங்க. உங்களுக்குன்னு ஒரு அடையாளம் கொடுத்திருக்காங்க. நேம் கொடுத்திருக்காங்க.
அப்படி நமக்காக இருக்கிறவங்களுக்கு நல்லது பண்றதுக்காக அரசியலுக்கு வர்றேன்னு சொல்லும் போது அதுக்கு நீங்க 100 சதவீதம் கீப் அப் பண்ணி அதை பின்பற்றி நடக்கணும். அரசியலுக்கு வந்துட்டும் நீங்க சினிமா ஷூட்டிங் பண்றீங்க என்றால் அப்புறம் எதுக்கு அரசியலுக்கு வர்றீங்க?
அரசியல் என்பது வித்யாசமான ஒரு களம். சினிமாவில் ஒரு படம் நஷ்டம் என்றால் அது தயாரிப்பாளரை மட்டும்தான் பாதிக்கும். மத்தபடி ஆர்ட்டிஸ்ட் டெக்னிஷியன் யாருக்கும் நஷ்டம் இல்லை. அவங்க சம்பளம் அவங்களுக்கு வந்துடும். ஆனால் பாலிடிக்ஸ்ல ஒருத்தரை நம்பி மக்கள் ஓட்டுப் போட்டால் அவங்களுக்கு எதுவுமே இவர்கள் செய்யவில்லை என்றால் அவர்களது வாழ்க்கையே 5 ஆண்டுகளுக்கு போய்விடும். ஜீரோ ஆயிடும்.
படிக்கிற பசங்க லேடீஸ் விவசாயிகள் எல்லோருக்குமே நஷ்டமாகி விடும். அப்போ எவ்வளவு சரியாக இருக்க வேண்டும்? விஜய் சார் அரசியலுக்கு வரும்போது கூட நான் அதை தான் சொன்னேன். நீங்க மக்களுக்கு நல்லது செய்யணும் என்று வந்தால் சினிமாவை பக்கத்தில் வெச்சுக்காதீங்க. ஃபுல் டைம் அரசியல் பண்ணினால்தான் நாளைக்கு உங்களுக்கு மதிப்பாக இருக்கும்.
சினிமா கிரேஸ்ல வந்துட்டீங்க. மக்களும் உங்களை நம்பிக்கையா தேர்ந்தெடுத்திருக்காங்க. அடுத்த 5 வருஷம் எப்படி இருக்குதுன்னு உங்க அரசியல் பயணத்தை பார்த்துதான் முடிவு செய்வாங்க. தெலுங்குல இப்படி தான் பவன் கல்யாண் சிரஞ்சீவி 2 பேரும் வந்தாங்க. அப்புறம் சிரஞ்சீவி நடிக்க போயிட்டார். பவன் கல்யாண் எப்படியாவது ஜெயிக்க வைங்கன்னு கெஞ்சி கெஞ்சி கடந்த எலக்ஷன்ல ஜெயிச்சார்.
துணை முதல்வர் ஆனபிறகும் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். பிரச்னைகளை பத்தி கவலைப்படாமல் கேள்வி கேட்காமல், ஏதாவது தவறுகள் நடந்தால் அதற்காக நடவடிக்கை எடுக்காமல் ஷூட்டிங்கில் அவர் இருக்கிறார். இப்படி அவர் இருந்தால் கெட்ட பெயர்தான் வரும். அப்புறம் இந்த சினிமாக்காரங்களே இப்படிதான் என்று சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களை பார்த்து மக்கள் திட்டுவார்கள் என்று நடிகை ரோஜா பேசியிருக்கிறார்.





