- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்கிட்ட அது இல்லே, திருடிட்டாங்கன்னு சொன்னேன், ஒரே நாள்ல அதை ரெடி பண்ணி கொடுத்துட்டார் -...

என்கிட்ட அது இல்லே, திருடிட்டாங்கன்னு சொன்னேன், ஒரே நாள்ல அதை ரெடி பண்ணி கொடுத்துட்டார் – நடிகர் விஜயகாந்த் குறித்து பேசிய நடிகை விந்தியா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சங்கமம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை விந்தியா. தொடர்ந்து பல படங்களில் நடித்து விந்தியா ரசிகர்களின் மனம் கவர்ந்தார். விஸ்வநாதன் ராமமூர்த்தி எஸ் மேடம் என் புருஷன் குழந்தை மாதிரி திருநெல்வேலி மகளிர்க்காக சார்லி சாப்ளின் என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அரசியல் ஆர்வம் காரணமாக அதிமுக கட்சியில் சேர்ந்த விந்தியா, இப்போதும் அதிமுக மேடைகளில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். அதிமுக கட்சியில் கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார். திமுக பாஜக காங்கிரஸ் தேமுதி நாம் தமிழர் கட்சி உள்பட சமீபத்திய தவெக கட்சி வரை எல்லா அரசியல் கட்சிகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் நடிகை விந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை விந்தியா கூறியதாவது, வெளிநாட்டுக்கு ஒரு கலை நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டு இருந்தாங்க. என்னால அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டேன். விஜயகாந்த் சார் தான் அப்போ நடிகர் சங்க தலைவராய் இருந்தார்.

விஜயகாந்த் சார் எனக்கு கால் பண்ணி, ஏன் வரலைன்னு கேட்டார். என்கிட்ட பாஸ்போர்ட் இல்லேன்னு சொன்னேன். பாஸ்போர்ட் இல்லையா என்று கேட்டார். இப்போ ரீசண்டா பாஸ்போர்ட்டை யாரோ திருடிட்டு போயிட்டாங்க அப்படின்னு சொன்னேன்.

- Advertisement -

அதுக்கு அவர், அப்படியா? பாஸ்போர்ட் இல்லாமல் விந்தியா எப்படி இருக்கலாம்? விந்தியா இல்லாம ஷோ எப்படி நடக்கலாம்ன்னு என்கிட்ட கேட்டார். அப்புறம் விஜயகாந்த் சார் நெப்போலியன் சார் 2 பேரும் சாஸ்திரி பவனுக்கு போய் ஒரே நாளில் பார்ம் எல்லாம் எழுதிக் கொடுத்து டாகுமென்ட்ஸ் கொடுத்து ஒரே நாளில் என் பாஸ்போர்ட் ரெடி பண்ணிட்டாங்க.

அப்படி பாஸ்போர்ட் ரெடி பண்ணிட்டு என்னை அந்த நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு போனாங்க. அப்போ நடிகர் சங்க தலைவரா விஜயகாந்த் செயலாளராக சரத்குமார் பொருளாளராக நெப்போலியன் சார் இருந்தாங்க. எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து கொண்டு போய் பீல்டுல நின்னு அந்த கலை நிகழ்ச்சியை கேப்டன் நடத்தினார் என்று நடிகை விந்தியா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்