- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் அது பற்றி வாயே திறக்காத விஜய் மற்றும் கமல்ஹாசன், ஆனால் மணிக்கணக்கில் அதைப்...

ஷூட்டிங் ஸ்பாட்டில் அது பற்றி வாயே திறக்காத விஜய் மற்றும் கமல்ஹாசன், ஆனால் மணிக்கணக்கில் அதைப் பற்றி பேசிய ரஜினிகாந்த் – பிரபலம் சொன்ன தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் என்று சொன்னால் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் ஆகிய 4 பேர் மட்டும்தான். மற்ற நடிகர்கள் எல்லாம் அடுத்த நிலைகளில்தான் உள்ளனர். இவர்கள் 4 பேர் மட்டுமே தோல்வி படங்களை தந்தாலும் நஷ்டம் தராத நட்சத்திர நடிகர்களாக இருக்கின்றனர். அதனால் இவர்களுக்கு தமிழ் சினிமாவில் தனி கவனம் இருந்து வருகிறது.

நீண்டகாலமாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 1990களில் பாட்ஷா படத்தில் நடித்த போதே ரஜினி அரசியல் குறித்த ஆர்வம் வெளிப்படையாக மக்கள் மத்தியில் பரவியது. ஆனால் கடைசி வரை இதோ அதோ என போக்கு காட்டியே கடைசி வரை அரசியலுக்கு வராமல் நழுவி விட்டார் ரஜினிகாந்த்.

- Advertisement -

அதே நேரத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் களத்தில் குதித்தவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல்வாதியாக கமலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. துவக்கத்தில் திமுகவை எதிர்த்தவர் இப்போது திமுகவின் விசுவாசியாக மாறிவிட்டார்.

இந்த சூழலில் கடந்தாண்டில் தனது அரசியல் பிரவேசத்தை திடீரென அறிவித்தவர் விஜய். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட சக கலைஞர்களிடம் சகஜமாக பேச மறுக்கும் நடிகர் விஜய் அரசியல்வாதியாக மாறியது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, தமிழ் சினிமாத்துறை சார்ந்த பலருக்கும் பலத்த ஆச்சரியத்தை தந்தது.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இதுபற்றி பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் அரசியல் குறித்து எதுவுமே பேசியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் விஜய் எதுவுமே பேச மாட்டார். ஷூட்டிங் வந்தால் ஸ்கிரிப்ட் என்ன, நடிக்க வேண்டிய சீன்கள் பற்றி மட்டும்தான் கேட்டு தெரிந்துக்கொள்வார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தது ஆச்சரியமாக இருக்கிறது.

அதே போல் ரஜினி கமல் பற்றிக்கூட நான் சொல்வேன். ரஜினியுடன் நான் நிறைய அரசியல் பேசுவேன். அவரும் அரசியல் பத்தி நிறைய பேசுவார். நான் நிறைய கிண்டல் கூட செய்வேன். முத்து படத்தில் கூட எப்போ வருவேன் எப்படி வருவேன் என்ற டயலாக் எல்லாம் கூட வந்தது. அதே போல் கமல் சார் அரசியலே பேச மாட்டார். சினிமா பற்றி மட்டுமே அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசுவார் என்று ரமேஷ் கண்ணா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்