- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை நடிகர் சூர்யா தொடர்வாரா? விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்துக்கு தொடரும்...

கருப்பு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை நடிகர் சூர்யா தொடர்வாரா? விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்துக்கு தொடரும் நெருக்கடி!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கருப்பு. இந்த படம் 340 கோடி ரூபாய்க்கு வசூலை அள்ளி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி படம் கருப்பு படமாக அமைந்தது. அதுவும் சூர்யா நடிப்பில் ரூ. 340 கோடி வசூலித்த முதல் படமும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருப்பு படம் வெளியான போது வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. சிங்கிளாக திரைக்கு கருப்பு வந்தது. மேலும் வேறு எந்த ஒரு நட்சத்திர ஹீரோவின் படங்களும் திரையரங்குகளில் ஓடவில்லை. அந்த படம் வெளியான சில வாரங்களில் வேறு முக்கிய படங்களும் ரிலீஸ் செய்யப்படாததால் கருப்பு படம் தனித்து ஓடி ஜெயித்துக் காட்டியது.

- Advertisement -

அதுமட்டுமின்றி மலையாள நடிகர் இந்திரன்ஸ், ஆர்ஜே பாலாஜி, நட்டி நடராஜ் ஆகியோர் தனித்துவமான நடிப்பும் கருப்பசாமியாக வந்த சூர்யாவின் வித்யாசமான கேரக்டரும் படத்துக்கு பெரிய பக்கபலமாக இருந்து சூர்யாவை பெரிய அளவில் ஜெயிக்க வைத்து சூப்பர் கம்பேக் கொடுத்தது.

அதே போல் வருகிற 14ம் தேதி வெளியாக உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் சூர்யாவுக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை தர வேண்டும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த படம் பல நெருக்கடிகளையும் சிக்கல்களையும் சந்தித்து, கருப்பு படம் வெற்றியை சூர்யா தொடர்வாரா என்பதையே கேள்விக்குறியாக்கி உள்ளது.

- Advertisement -

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகும் போது நடிகர் விஷால் இயக்கி நடித்த மகுடம் படமும் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே வெளியான ஸ்பைடர் மேன் ஒடிசி ஜனநாயகன் படங்களும் ஓடிக்கொண்டு இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படமும் ஓடுகிறது. இப்படி 5 படங்களுக்கு மத்தியில்தான் சூர்யா படம் திரைக்கு வருகிறது. இதுவே இந்த படத்துக்கு பெரிய மைனஸ் பாயிண்டாக உள்ளது.

அத்துடன் இந்த படத்தை திரையிட தியேட்டர்களில் பர்சன்டேஜ் குறித்த பிரச்னையும் பெரிய அளவில் விவகாரமாக மாறியுள்ளது. இதனால் ஓபனிங் டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்கின்றனர். இந்த படம் 120 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தால் 46 கோடி ரூபாய்க்கு படத்தை வாங்கிய வினியோகஸ்தருக்கு அந்த விலையே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கருப்பு படத்தின் வெற்றியை மீண்டும் சூர்யா தக்க வைப்பாரா என்பதுதான் இப்போது பெரிய குழப்பமாக மாறியுள்ளது.

- Advertisement -

சற்று முன்