- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய நண்பர் உதயநிதியை மட்டும் கைது செஞ்சீங்களே? அதே போல அவங்களையும் கைது செய்வீங்களா?...

என்னுடைய நண்பர் உதயநிதியை மட்டும் கைது செஞ்சீங்களே? அதே போல அவங்களையும் கைது செய்வீங்களா? – முதல்வர் விஜய்க்கு நடிகர் விஷால் கேள்வி!

- Advertisement -

கடந்த வாரத்தில் திமுக சார்பில் விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணங்கள் வழங்கக்கோரி தஞ்சாவூரில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இப்போதைய திமுக சட்டசபை எதிர்கட்சி தலைவர் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாதது குறித்து கண்டித்து பேசிய போது, எங்கு தண்ணீர் வர வேண்டுமோ அங்கு தண்ணீர் வரவில்லை என்று பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் ஒரு நடிகை பெயரை குறிப்பிட்டு கத்தியதால், அந்த நடிகையை உதயநிதி ஆபாசமாக பேசிவிட்டார் என்ற புகார் எழுந்தது.

- Advertisement -

ஆனால் உண்மையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கும் அந்த குற்றச்சாட்டுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்றுதான் அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறினர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை தமிழக போலீஸ் கைது செய்தது. தஞ்சாவூர் வரை அவரை வேனில் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

பின்னர் கோர்ட் உத்தரவின்படி அன்று இரவே உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டு இரவு சென்னைக்கு திரும்பினார். இது பெரிய அளவில் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று ஒருநாள் முழுவதும் உதயநிதி கைது செய்யப்பட்ட சம்பவமே மக்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறியது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால், உதயநிதி ஸ்டாலின் இருவரும் சென்னை லயோலா கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அதே போல் இன்றைய முதல்வர் விஜயும் அதே கல்லூரியில் விஷால் உதயநிதிக்கு சீனியர் மாணவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்லூரி காலத்தில் விஷால் உதயநிதி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் விஷால் கூறியதாவது, என்னுடைய நண்பர் உதயநிதி ஏதோ பேசிட்டார் என்று முதலமைச்சர் விஜய் அவரை கைது செய்தாரே? அதேபோல் யூடியூப் சேனலில் பல பேர் பெண்களைப் பற்றியும் நடிகர் நடிகைகளை பற்றியும் ரொம்ப கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இதே போல் கைது செய்ய வேண்டும். இதை முதலமைச்சர் விஜய்க்கு நான் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்