- Advertisement -
Homeபொழுதுபோக்குபாரதிராஜா இயக்கத்தில் நடிகர் கமல் நடித்த படம் - கே பாக்யராஜ் கதை எழுதிய படத்தின்...

பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் கமல் நடித்த படம் – கே பாக்யராஜ் கதை எழுதிய படத்தின் டைட்டிலில் நடிக்கும் அவரது மகன் சாந்தனு!

- Advertisement -

சமீபகாலமாக பழைய ஹிட் படங்களின் டைட்டில்களை புதிய படங்களுக்கு வைப்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அதனால் பழைய படங்களின் தலைப்பில் மீண்டும் புதிய படங்கள் நிறைய உருவாகி வருகின்றன. இதற்கு காரணம் தலைப்புக்கு பஞ்சமா என்று கேள்வியும் எழுகிறது.

படத்தின் தலைப்பைப் பற்றிக் கூட யோசிக்க இயக்குனர்கள் அதிகமாக மூளையை செலவழிப்பதில்லை என்பதும் ஒரு காரணமாக உள்ளது. ஆனால் இது இயக்குனர் கே பாக்யராஜ் மகன் சாந்தனு நடிக்கும் கதை என்பதால் அப்பா எழுதிய கதையின் பட டைட்டிலை வைத்திருப்பது பொருத்தமாக உள்ளது.

- Advertisement -

கடந்த 1985ம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் ஒரு கைதியின் டைரி. இந்த படத்தில் கதாநாயகிகளாக ராதா மற்றும் ரேவதி நடித்திருந்தனர். மலேசியா வாசுதேவன் ஜனகராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்போது ஒரு கைதியின் டைரி என்ற அதே டைட்டிலில் புதிய படம் உருவாகிறது.

இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் டைரக்ட் செய்கிறார். இதில் ஹீரோவாக நடிகர் சாந்தனுவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சீமான் நடிக்கின்றனர். படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

- Advertisement -

மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படம் அப்பா மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் தயாராக உள்ளது. மதுரையின் வாழ்வியலும் அப்பா மகன் உறவில் ஏற்படும் உணர்வுபூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுத்து முடிக்க படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு கைதியின் டைரி படத்தை இயக்குனர் பாரதிராஜா டைரக்ட் செய்தார். கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தின் கதையை எழுதியது இயக்குனர் கே பாக்யராஜ் தான். இந்த படம்தான் அமிதாப் பச்சன் நடிப்பில் கே பாக்யராஜ் இயக்கத்தில் இந்தியில் வெளியாகி ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்