பொதுவாக சினிமா துறையில் நடிகர், நடிகைகள் மத்தியில் விவாகரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் நளினி ராமராஜன், கமல் சரிகா, சீதா பார்த்திபன், பிரசாந்த் கிரஹலட்சுமி, தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜீவி பிரகாஷ்குமார் சைந்தவி, ஜெயம் ரவி ஆர்த்தி, ஏஆர் ரகுமான் சாயிரா பானு என பட்டியல் வளர்ந்துக்கொண்டே போகிறது.
இப்படி நட்சத்தி ரதம்பதியர் பிரிவு என்பது அவர்களது கேரியரில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. உதாரணமாக 1990களில் டாப் ஸ்டார் நடிகராக இருந்த பிரசாந்த், திருமண வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத சறுக்கலால் தனது மனைவி கிரஹலட்சுமியை விவாகரத்து செய்தார். அதன்பிறகு அவரது சினிமா பயணமும் தடைபட்டு பல ஆண்டுகளாக நடிக்கவில்லை. இப்போதுதான் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
சினிமாவில் இப்படி விவாகரத்துகள் அதிகரித்து வருவதால்தான் சில நடிகர்கள், சில நடிகைகள் திருமணமே வேண்டாம் என்ற முடிவில் முரட்டு சிங்கிளாகவே வாழ்க்கை பயணத்தை தொடர முடிவு செய்திருக்கின்றனர். நடிகர்கள் விஷால், சிம்பு, நட்டி, எஸ்ஜே சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பூனம்பஜ்வால், கிரண் ரத்தோர், கோவை சரளா, தபு என பலரும் முரட்டு சிங்கிளாகவே இருக்க விரும்ப இதுதான் காரணமாக உள்ளது.
தெலுங்கு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முதலில் வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. தமிழில் அவரது நடிப்பில் வெளியான வைஜெயந்தி ஐபிஎஸ், மன்னன் போன்ற படங்கள் ரசிகர்களால் மறக்க முடியாத படங்களாக இன்று வரை இருக்கின்றன. தன்னை எதிர்த்து நடிக்க சரியான நடிகை என்று ரஜினியே விஜயசாந்தியை பரிந்துரை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் நிறைய வெற்றிப் படங்களில் நடித்த விஜயசாந்தி தான், அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து லேடி சூப்பர் ஸ்டராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். ஒரு கட்டத்துக்கு பிறகு அரசியலில் கால்பதித்த விஜயசாந்தி பெரிய அளவில் அரசியல் சாதிக்க முடியவில்லை. சினிமாவில் நடிப்பதையும் வெகுவாக குறைத்துக்கொண்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய முன்னாள் நடிகை விஜயசாந்தி கூறியதாவது, இப்போது நிறைய பிரேக்கப் ஆகிறது. யாருக்கும் பொறுமை இல்லை என்று நினைக்கிறேன். குடும்பம் என்றால் சண்டை சச்சரவு எல்லாமே வரும். எதுவுமே வராமல் இருக்காது. சில இடங்களில் நாம்தான் அட்ஜஸ்ட் செய்துக்கொண்டு போக வேண்டும். சில இடங்களில் நாம் கொஞ்சம் இறங்கினால்தான் லைப் நன்றாக இருக்கும். நான் ஒரு பெரிய ஸ்டார், நீங்க என்ன சொல்றது என்று நினைத்தால் அது சரியாக வராது, என்று கூறியிருக்கிறார் மாஜி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி. அவரது கருத்தை ரசிகர்கள் வெகுவாக வரவேற்று பாராட்டியுள்ளனர்.





