- Advertisement -
நடிகர் தனுஷ் அரசியல் வருகை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, எவ்வளவோ செல்வாக்கு மிக்க நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள். இரண்டு வருடங்களுக்குள் கடையை மூடிவிட்டு சென்று விட்டார்கள். 20 எம்எல்ஏ எம்பி என செல்வாக்கில் இருந்தவர்கள் கூட கட்சியை நடத்த முடியவில்லை. 32 வருடம் மிகுந்த இன்னல்களுக்கு இடையே மதிமுகவை நடத்தி வருகிறோம். மதிமுக ஒரு பொழுதும் தனது கொள்கையில் இருந்து விலகிச் செல்வதில்லை என்று வைகோ கூறியிருக்கிறார்.





