- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா வாழ்க்கை படத்தில் முக்கியமான அவர்கள் இரண்டு பேரும் இருப்பார்களா, இருட்டடிப்பு செய்யப்படுவார்களா? - ரசிகர்களின்...

இளையராஜா வாழ்க்கை படத்தில் முக்கியமான அவர்கள் இரண்டு பேரும் இருப்பார்களா, இருட்டடிப்பு செய்யப்படுவார்களா? – ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி இதுதான்!

- Advertisement -

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்க தமிழ் சினிமாவில் ஆயத்தப் பணிகள் துவங்கி விட்டன. மும்பையை சேர்ந்த முக்கிய தயாரிப்பு நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தில், இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க இவரது சம்பளம் ரூ. 50 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை இயக்கப் போவது சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் போன்ற ரத்தம் தெறிக்கும் வன்முறை படங்களை எடுத்த டைரக்டர் அருண் மாதேஸ்வரன் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது. ஒரு இசை மேதையின் வாழ்க்கை படத்தை அதன் பூரணத்துவம் குறையாமல், மிக இயல்பாக தர இவரால் முடியுமா என்பதே பலரது சந்தேகமாக உள்ளது.

இதில் ஆறுதல் தரும் ஒரு விஷயமாக,இளையராஜா வாழ்க்கை படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் பொறுப்பெடுத்துக்கொண்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கமல்ஹாசன், இளையராஜாவின் நீண்ட நெடிய கால நண்பர். ஆரம்பத்தில் இருந்தே அவருடன் நெருங்கி பழகியவர். அவரது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் போது கமல்ஹாசனும் உடன் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது பால்ய கால வாழ்க்கை காட்சிகளை, பண்ணைபுரத்து வாழ்வியல் நிகழ்வுகளை இப்போதுள்ள பண்ணைபுரத்தில் எடுத்தால் சரிவராது என்பதால் அந்த படப்பிடிப்பை கர்நாடகாவில் நடத்த உள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு கர்நாடகாவில் துவங்குகிறது.

இதற்கிடையே இளையராஜாவின் இசை பயணத்தில் கடந்த 1980களில் 6 ஆண்டுகள் இளையராஜாவும் – கவிஞர் வைரமுத்துவும் ஒன்றாக பயணித்த காலகட்டம் மிக முக்கியமானவை. இருவருமே தங்களது திரைப்பயணத்தில் மிக முக்கிய கட்டங்களை கடந்தது இந்த காலகட்டத்தில்தான். இளையராஜா – வைரமுத்து கூட்டணி என்பது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பொற்காலமாக இருந்தது. ஆனால் அவர்களது திடீர் பிரிவு அதன்பிறகு 35 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது.

அதே போல் இளையராஜா இசை பயணத்தில் ஏஆர் ரகுமானின் வருகை என்பது பெரிய அளவில் பாதிப்பை தந்தது. இளையராஜாவின் பெருமையை, அவருக்கான இடத்தை ஏஆர் ரகுமானின் வளர்ச்சி காலம், இளையராஜாவுக்கு மிகப்பெரிய அதிருப்தியை, வெற்றிடத்தை ஏற்படுத்தியதும் உண்டு. அதே நேரத்தில் வைரமுத்து, ஏஆர் ரகுமான் கூட்டணி புகழ் வெற்றி, இளையராஜாவுக்கு பயங்கர கோபத்தை உண்டுபண்ணியது. அதனால் வைரமுத்து, ஏஆர் ரகுமான் ஆகிய இருவரையும் தனது வாழ்க்கை சரித்திரத்தில் இளையராஜா கொண்டு வரமாட்டார். இருட்டடிப்பு செய்து விடுவார் என்ற பேச்சே பரவலாகி வருகிறது.

சற்று முன்