- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் அப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கலே - வேட்டையாடு விளையாடு படம்...

ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் அப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கலே – வேட்டையாடு விளையாடு படம் குறித்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை இயக்கி ரசிகர்களுக்கு தந்தவர் கௌதம் மேனன். குறிப்பாக அவர் டைரக்ட் செய்த விண்ணை தாண்டி வருவாயா வாரணம் ஆயிரம் வேட்டையாடு விளையாடு மின்னலே காக்க காக்க வெந்து தணிந்தது காடு பச்சைக்கிளி முத்துச்சரம் உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம்.

அவரது இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் கடந்த 7 ஆண்டுகளாக திரைக்கு வராமல் இழுபறி நீடித்து வருகிறது. இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் கௌதம் மேனன் மாறியதால் நிதி நெருக்கடியில் சிக்கி இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். அதே நேரத்தில் பல படங்களில் அவர் நடிகராகவும் திரையில் தோன்றி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் மேனன் கூறியதாவது, நான் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை டைரக்ட் செய்யும் போது அந்த காட்சிகளை அவர்களுக்கு நடித்து காட்டி விளக்குவேன். ஆனால் கமல் சார் நடிக்கும் போது அப்படி செய்ய முடியாது. அவரிடம் நடித்துக் காட்ட முடியாது.

வேட்டையாடு விளையாடு படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிக்குரிய விஷயங்களை அவரிடம் சொல்லிவிட்டு மானிட்டர் பார்க்க சென்று விடுவேன். அந்த படத்தில் பல விஷயங்கள் ரொம்பவும் அழகாக யதார்த்தமாக நடந்தது கமல் சாரின் அற்புதமான நடிப்பில்தான். அதில் பல காட்சிகள் அப்படிதான் ரசிக்கும்படி இருந்தது.

- Advertisement -

குறிப்பாக அந்த முதல் சண்டை காட்சியில் கேட்டை மூட்றா என்று கமல் சொல்லிவிட்டு என் கண்ணு வேணும்ன்னு கேட்டியா என்று டயலாக் பேசிவிட்டு கத்தியை தருவது மட்டும் தான் காட்சியாக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த டயலாக்கை பேசிவிட்டு தனது வலது கண்ணை விரல்களால் கமல் விரித்து காட்டுவார்.

அப்படி ஒரு சீன் நாங்கள் சொல்லவே இல்லை. திட்டமிடவும் இல்லை. அது கமல் சாரே தான் திடீரென கண்ணை விரித்து விரல்களை வைத்து காட்ட உடனே கேமரா மேனிடம் நான் சைகை செய்து அதை குளோசப்பில் காட்ட வைத்தேன். அது ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டுமல்ல தியேட்டரிலும் பெரிய வரவேற்பை பெற்றது. அப்படி ஒரு மேஜிக்கை கமல் சாரால் மட்டும்தான் செய்ய முடியும் என்று இயக்குனர் கௌதம் மேனன் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்