- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் இயக்கிய பிரமாண்ட படங்களின் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் - சினிமாவை விட்டே அவர் விலகி...

ஷங்கர் இயக்கிய பிரமாண்ட படங்களின் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் – சினிமாவை விட்டே அவர் விலகி ஓட காரணமே அந்த உச்ச நடிகர்தானா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு முன்பே ஜென்டில்மேன் காதலன் காதல் தேசம் ரட்சகன் எனத் தொடர்ந்து மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவர் கேடி குஞ்சுமோன். ஷங்கர் இயக்கத்தில் வெளியான பிரமாண்ட படங்களை அப்போதே கோடிக்கணக்கில் துணிச்சலாக பணம் செலவு செய்து எடுத்தவர் அவர்தான். அடுத்துத் தனது மகன் எபி குஞ்சுமோனை ஹீரோவாக்க அவர் முடிவெடுத்தார்.

இதற்காக 1997ல் கோடீஸ்வரன் என்ற படத்தை இமாலய பட்ஜெட்டில் தொடங்கினார். கதாநாயகியாக அன்றைய கனவுக்கன்னி சிம்ரன் கமிட் செய்யப்பட்டார். இசையமைப்பாளர் ஆகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் படம் ரிலீஸுக்கு முன்பே பட்டித்தொட்டி எங்கும் பெரிய ஹிட்டானது. அனல் பறக்கும் ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனம் ஆட பாலிவுட்டின் முன்னணி நடிகை கரிஷ்மா கபூருக்கு அன்றைய கால கட்டத்திலேயே 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்தார் என்றும் பேசப்பட்டது. இன்றும் அந்தப் படத்தின் டீசர் மறறும் டிரெய்லர் யூடியூப்பில் உள்ளது.

- Advertisement -

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு 90களிலேயே அத்தனை பிரம்மாண்டத்தில் ஒரு படம். ஹீரோ எபி குஞ்சுமோனும் பார்க்க அழகாக தான் இருந்தார். இந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகியிருந்தால் வெற்றி-தோல்வியைத் தாண்டி எபி குஞ்சுமோனுக்கு அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் குவிந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. ஏற்கெனவே ரட்சகன் படத்தில் போட்ட காசை எடுக்க குஞ்சுமோனால் முடியவில்லை. அடுத்து வினீத்தை வைத்து குஞ்சுமோன் தயாரித்த சக்தி படமும் நிதி நெருக்கடியைக் கொடுத்திருந்தன.

இன்னொரு பக்கம் தனது மகன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காகக் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்திருந்தார். சரியாக இந்தச் சமயத்தில்தான் நடிகர் விஜயை அழைத்துக்கொண்டு அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் குஞ்சுமோனை சந்தித்துள்ளார். குஞ்சுமோனின் பிராண்ட் மதிப்பை வைத்து விஜய்க்கு பெரிய ஹிட் கொடுக்க எஸ்ஏசி திட்டமிட்டார். குஞ்சுமோனும் விஜயை வைத்து 2 படங்களைத் தயாரிக்க ஓகே சொன்னார். அதுதான் விஜய் நடித்த நிலாவே வா மற்றும் என்றென்றும் காதல் ஆகிய படங்களாகும்.

- Advertisement -

இதுதான் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரித்து ரிலீஸ் செய்த கடைசி 2 படங்கள். ரட்சகன் படத்தை விட குறைவான பட்ஜெட் தான் என்றாலும், 2006ல் ஒரு நேர்காணலில் இந்த 2 படங்களில் முதல் படத்தில் 1.5 கோடி, 2வது படத்தில் 1.75 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாக குஞ்சுமோன் கூறியிருக்கிறார். இது அப்போது மிகப்பெரிய ஒரு தொகையாகும்.

அதுவே தன்னுடைய திவால் நிலைக்கு காரணம் என்றும், விஜயோட அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தான் அதுக்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த படங்கள் தந்த திடீர் கடன்களால் தன் கைவசம் இருந்த மொத்தப் பணத்தையும் இழந்து, தன்னுடைய சொந்த மகனின் கோடீஸ்வரன் படத்தைக் கடைசிவரை ரிலீஸ் செய்ய முடியாமலேயே குஞ்சுமோன் போய்விட்டார். இப்படி ஷங்கர் படங்களின் பிரமாண்ட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோனை சினிமாவை விட்டு விலகச் செய்த பெருமைக்கு சொந்தக்காரர்தான் நடிகர் விஜய்தான் என்று தமிழ் சினிமா ரசிகர்களிடையே விமர்சனம் எழுந்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
.

- Advertisement -

சற்று முன்