- Advertisement -
Homeபொழுதுபோக்குபொய்களை கொண்டு நாட்டை வடிவமைத்தால் அது முட்டாள்களின் தேசமாகி விடும் - விஜய் பட இயக்குனர்...

பொய்களை கொண்டு நாட்டை வடிவமைத்தால் அது முட்டாள்களின் தேசமாகி விடும் – விஜய் பட இயக்குனர் எச் வினோத் ஆவேசம்!

- Advertisement -

சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 நேர் கொண்ட பார்வை வலிமை துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் எச் வினோத். இதில் சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அஜீத்குமார் நடித்த மற்ற படங்களும் கமர்ஷியல் ஆக ரசிக்கும்படியான படங்களாக இருந்தன.

ஆனால் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதற்கு பல காரணங்களும் இருந்தன. எனினும் பல தடைகளை கடந்து 6 மாதங்கள் கழித்து திரைக்கு வந்த ஜனநாயகன் படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியதே பெரிய சாதனையாக தான் பார்க்கப்படுகிறது. ஆனால் படம் காட்டு மொக்க என்பதை தளபதி ரசிகர்களே ஏற்றுக்கொண்டார்கள்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத் கூறியதாவது, ஒரு பொய் இருக்கு. ஒரு உண்மை இருக்கு. இது எப்படி ஒரு மனுசனோட வாழ்க்கையில இயங்குகிறது என்றால் ஒரு உண்மை ஒருத்தனை அறிவாளியாக்குது. ஒரு பொய் ஒருத்தனை முட்டாள் ஆக்குது.

ஏன்னா நீங்க ஒரு பொய்யை நம்பிட்டிங்க. நாம ஒரு பெரிய சமூகம், உயர்ந்தவன். ஆனாலும் நாம கஷ்டப்படுகிறோம் அப்படின்னு நீங்க நம்பிட்டு அதுக்கு காரணம் இன்னொருத்தர்தான். இவனால தான் நாம கஷ்டப்படுறோம். இந்த ஜாதியால் தான் நாம கஷ்டப்படுறோம்ன்னு நீங்க நம்பிட்டீங்கன்னா போச்சு.

- Advertisement -

நாளைக்கு என்ன பண்ணலாம் என்ன படிக்கலாம் என்ன வேலை செய்யலாம் என்ன வியாபாரம் செய்யலாம் அப்படிங்கிறதை எல்லாம் விட்டுட்டு அவனை எப்படி அழிக்கலாம்? அவனை எப்படி காலி பண்ணலாம் அப்படிங்கற வட்டத்துக்குள்ள போயிடுவிங்க.

ஒரு பொய் உங்கள முட்டாளா மாத்திடுது. அப்போ அந்த முட்டாள்கிட்ட எந்த பதிலும் இருக்காது. அப்போ நிறைய முட்டாள்களை வைத்து ஒரு நாட்டை எப்படி கட்டமைக்க முடியும்? நீங்க நிறைய பொய்களை வைத்து தேசத்தை கட்டமைச்சா அது நிறைய முட்டாள்கள் கொண்ட தேசமாக மாறிடும் என்று இயக்குனர் எச் வினோத் அந்த நேர்காணலில் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்