தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் தமிழில் வெளியான படம் அன்னபூரணி. தெலுங்கில் வெளியான படம் மனசங்கர வரபிரசாத் காரு. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
முன்னணி நட்சத்திர நடிகையாக உள்ள அவர் திருமணத்துக்கு பிறகு நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. இதற்கிடையே அவர் நடிகர் கவினுடன் இணைந்து நடித்த ஹாய் என்ற படம் வருகிற 28ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் நடிகர் யஷ் உடன் அவர் நடித்த டாக்ஸிக் படமும் விரைவில் திரைக்கு வருகிறது.
இதற்கிடையே நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் பெரிய வெற்றியை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக இந்த படம் மூக்குத்தி அம்மன் 2 என்ற டைட்டிலில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சுந்தர் சியும் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் வில்லி கேரக்டரில் நடிகை ரெஜினா கசான்ட்ரா நடித்திருக்கிறார்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா ரெஜினா ஆகியோருடன் ஊர்வசி சினேகா யோகிபாபு துனியா விஜய் சிங்கம் புலி அபிநயா இனியா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர் நடித்திருக்கிறார். ரெஜினா கசான்ட்ரா ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.
இதுவரை இல்லாத புதிய ஒரு தோற்றத்தில் ரெஜினா மூக்குத்தி அம்மன் 2 படத்தில் பவர்ஃபுல் ஆன ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாராவை போலவே ரெஜினா கேரக்டரும் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் ரெஜினா நடித்து வருவது குறிப்பிடப்பட்டது.





