- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக திரும்பிய நடிகர் தனுஷ் - இப்படி நன்றி மறக்கலாமா? லப்பர்...

பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக திரும்பிய நடிகர் தனுஷ் – இப்படி நன்றி மறக்கலாமா? லப்பர் பந்து பட இயக்குனருக்கு இப்படியும் ஒரு சோதனையா?

- Advertisement -

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் அடுத்து நடிக்க உள்ள புதிய படத்தை லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரையில் துவங்க திட்டமிடப்பட்டது. இதற்காக மதுரையில் அலுவலகம் அமைத்து ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளில் இயக்குனர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த படத்தில் நடிக்க குறைந்தபட்ச அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு பிறகு பிராபர்டி ஷேர் அடிப்படையில் லாபத்தில் பங்கு என்ற முறையில் சம்பளம் வாங்குவதாக நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இப்போது ரூ. 70 கோடி வரை முழுமையான சம்பளம் தர வேண்டும் என்று டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நடிகர் தனுஷ் நெருக்கடி தந்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு சொன்னதால் இந்த படத்தை தயாரிக்க வேல்ஸ் பிலிம் நிறுவனம் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் லலித்குமார் என பல தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்த படத்தை தயாரிக்குமாறு தனுஷ் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். ஆனால் எதுவும் இன்னும் ஓகே சொல்லவில்லை.

இதற்கிடையே எந்த நிறுவனம் தனுஷ் நடிக்கும் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தாலும் என்ஓசி தருவதில்லை என்ற முடிவில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே இட்லி கடை படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் தனுஷூக்கு மிகப்பெரிய சம்பளத்தை வாரி வழங்கியுள்ளது.

- Advertisement -

அத்துடன் சம்பள பிரச்னையில் சில தயாரிப்பு நிறுவனங்களுடன் நடிகர் தனுஷூக்கு இருந்த பஞ்சாயத்துகளையும் கடந்த காலங்களில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் முன் நின்று தீர்த்து வைத்துள்ளது. ஆனால் இந்த நன்றி எல்லாம் மறந்து விட்டு இப்போது நடிகர் தனுஷ் இந்த படத்தையே வேறு நிறுவனம் மூலம் தயாரிக்க முயற்சித்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் சிக்கி திணறுவது லப்பர் பந்து பட இயக்குனர்தான். மேலும் இந்த படத்துக்கு என்ஓசி தராத பட்சத்தில் இதே இயக்குனர் இயக்கத்தில் கதையில் வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் தயாரிக்கவும் டான் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. மேலும் இதுவரை தனுஷ் சம்பள முன்பணம் ரூ. 20 கோடி கடந்த 2 ஆண்டுகளாக ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் ரூ. 10 கோடி என ரூ. 30 கோடி டான் பிக்சர்ஸ் செலவு செய்துள்ளது. அதை தந்தால் மட்டுமே தனுஷ் படத்தை மற்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்