- Advertisement -
Homeபொழுதுபோக்குகோர்ட்டில் விவாகரத்து வழக்கில் வாபஸ் வாங்கிய முதல்வர் விஜய் மனைவி சங்கீதா, பின்னணி காரணம் இதுதானா?...

கோர்ட்டில் விவாகரத்து வழக்கில் வாபஸ் வாங்கிய முதல்வர் விஜய் மனைவி சங்கீதா, பின்னணி காரணம் இதுதானா? – திருமண நாளில் கூட அந்த சம்பவம் நடக்கலையே?

- Advertisement -

கடந்த 1999ம் ஆண்டில் இதே நாளில் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடிகர் விஜய் – சங்கீதா திருமணம் நடந்தது. இன்று அவர்களது 27ம் ஆண்டு திருமண நாள். இந்த நாளில் பிரிந்து போன விஜய் – சங்கீதா குடும்பம் ஒன்று சேரும் ஒரு சந்தோஷமான நிகழ்வு நடக்கும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை.

தனது கணவர் விஜய், வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். இது சில ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு தெரிய வந்தது. நான் அதை கண்டித்தும் அவர் அந்த உறவை விட்டு விலகவில்லை. மேலும் அந்த நடிகையுடன் அவர் பழக்கத்தை கைவிடவில்லை என்று கூறியே சங்கீதா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தார்.

- Advertisement -

இந்த விவாகரத்து வழக்கு 6 மாதங்களாக கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு அதாவது கடந்த 7ம் தேதி திடீரென இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சங்கீதா தெரிவித்தார். இது விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தந்தது. எனினும் பரவாயில்லை, மீண்டும் விஜய் சங்கீதா இணைந்து அந்த குடும்பம் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழட்டும் என்றுதான் மக்கள் சந்தோஷப்பட்டனர். அதுதான் நடக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் கோட்டை கொத்தளத்தில் கடந்த ஆகஸ்ட் 15 தேதியன்று நடந்த சுதந்திர தினவிழாவில் நடிகை திரிஷா தனது அம்மாவுடன் வந்து முதல் வரிசையில் விஜயின் பெற்றோருடன் அமர்ந்துக்கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்து மகிழ்ந்தார். அன்று விஜய் திரிஷாவை மையப்படுத்தி தோட்டம் கொண்ட ராசாவே பாடல் இணையத்தில் வைரலாகி பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதன்மூலம் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் மனுவை சங்கீதா வாபஸ் பெற்ற போதிலும் விஜய் திரிஷா நட்பில் எந்த விரிசலும் பிரச்னையும் இல்லை. அது எப்போதும் போல் தொடர்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இந்த விழாவில் திரிஷா தன் அம்மாவுடன் கலந்துக்கொண்டு அதை உறுதிப்படுத்தி இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் இன்று திருமண நாள் கொண்டாட வேண்டிய தம்பதி விஜய் – சங்கீதா, பிரிவு நிலையிலேயே தொடர்வதால் அவர்களுக்குள் குடும்ப உறவை கொண்டாடும் எண்ணம் இனி இல்லை. மீண்டும் குடும்பமாக ஒன்றாக சேர்ந்து வாழவும் சங்கீதா விஜய்க்கு விருப்பம் இல்லை. அதே நேரத்தில் விஜயை சங்கீதா விவாகரத்து செய்து விட்டால் விஜய் 2வது திருமணம் செய்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. அது முரட்டு சிங்கிளாக வலம் வரும் அந்த நடிகைக்கு வாய்ப்பாகி விடும் என்பதால் தான் இந்த வழக்கு வாபஸ் முடிவுக்கு சங்கீதா வந்திருக்கிறார் என்றும் உறுதியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்