நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. அந்த படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது தனது அடுத்த படம் 64வது படமாக டேர் டெவில் என்ற படத்தில் நடிக்க அஜீத்குமார் முன்வந்துள்ளார். இந்த படத்தை அவரது மனைவி ஷாலினி அஜீத்குமார் சொந்தமாக தயாரிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கும் பட்சத்தில் தினமும் படப்பிடிப்பு தளத்தில் செலவுகளுக்காக ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை கையிருப்பில் இருக்க வேண்டும். அதனால் நடிகர் அஜீத்குமாரின் கார் ரேஸ் வீடிேயோக்களை தொகுத்த கிளாடியேட்டர் என்ற படத்தின் மூலம் கணிசமான ஒரு தொகையை அஜீத்குமார் எதிர்பார்த்தார்.
ஆனால் சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய அந்த கிளாடியேட்டர் படத்தில் அஜீத்குமாரின் கார் ரேஸ் காட்சிகளே இடம்பெற்றுள்ளன. இதை பொதுவான ரசிகர்கள் யாரும் தியேட்டருக்கு வந்து பார்க்க மாட்டார்கள். அதனால் இந்த படத்தை விலை கொடுத்து வாங்க எந்த வினியோகஸ்தரும் முன்வரவில்லை.
மேலும் இந்த படத்தை கொடுங்கள். படங்களில் திரையிட்டு வருகிற பணத்தில் எங்கள் கமிஷனை எடுத்துக்கொண்டு மீதியை தருகிறோம் என்றும் சில வினியோகஸ்தர்கள் அஜீத்குமாரிடம் கூறியிருக்கின்றனர். இதனால் அப்செட் ஆன நடிகர் அஜீத்குமார், மொத்தமாக கிளாடியேட்டர் படத்தை விற்றுவிட முடிவு செய்திருக்கிறார்.
அப்படி மொத்தமாக முழு உரிமைகளையும் கொடுத்து அந்த ஆவணப்படத்தை விற்றுவிட்டால் அதன்மூலம் வருகிற தொகையை டேர் டெவில் படப்பிடிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக ஜியோ மற்றும் பனாரமா ஸ்டுடியோஸ் ஆகிய 2 கார்பரேட் நிறுவனங்களிடம் அஜீத்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அதில் ஜியோ நிறுவனம் இந்த கிளாடியேட்டர் ஆவண படத்தை வாங்கிக்கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது. தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் என ஒட்டுமொத்த உரிமையையும் அந்த நிறுவனத்துக்கே விற்றுவிட அவர் முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தை வாங்கும் நிறுவனம் ஓடிடியில் அல்லது திரையில் இதை வெளியிடுவது குறித்து அவர்களே முடிவு செய்வார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





